பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

அ-218 ஒப்புரவறிதல் 22


வேறு பொருள் உண்டு என்று கூறி, அதனை மேலே விளக்குவார்.

2) செயும் நீர செய்யாது அமைகலா ஆறு : அவன் பிறர்க்குச் செய்து வந்த பொதுநலக் கொடைகளைத் தன்னால் செய்ய இயலாமல் மனம் வருந்துகின்ற நிலையே.

செயும் நீர: பிறர்க்குச் செய்து வந்த நீர்மையான செயல்களை

- அஃதாவது நீர்மையான செயல்களாகிய ஒப்புரவாண்மையை - அஃதாவது பொதுநல உதவி கொடைகளை.

- கேட்டுச் செய்வது உதவி கேளாமலே செய்வது கொடை

‘தண்டாமல் ஈவது தாளாண்மை; தண்டி அடுத்தக்கால் ஈவது வண்மை’

- என்னும் ஒளவையார் தனிப்பாடலை ஒர்க. செய்யாது அமைகலா.ஆறு:

- தன்னால் செய்ய இயலவில்லையே என்று மனம் அமைதியற்றிருக்கின்ற நிலை.

- அமைகலா - அமைகு + அலா. அமைகு - அமைவு; அலா-அல்லாத, அமைவு - அமைதி; ஆறு - வழி, போக்கு, நிலை.

- அமைதியில்லாதது - மனம் வருந்துகின்ற நிலை.

- 'அமைகல்லா’ - மதுரைக் காஞ்சி:343
- மலைபடு கடாம்:263


‘பிரிவுஅருங் காலை
துறந்து அமைகல்லார் காதலர்
மறந்து அமைகல்லாதென் மடங்கெழு நெஞ்சே' - ஐங்:457:3-4

‘செற்றார் கண்சாய யான் சாராது அமைகல்லேன்’ - கலி:104:6

'மறந்தும் அமைகுவர் கொல்’ - அகம்: 223:2

‘இவண்நலம் தாராது அமைகுவ ரல்லர்’ - புறம்: 351:7

'நின்இன்று அமைகுவென் ஆயின்’ . - நற்:400:5

'யாங்கு மறந்(து) அமைகோ யானே’ - குறுந்:132:3

- நடுநிலையான பொதுமை நலம் கருதுபவன், பிறர்க்குச் செய்து வந்த நீர்மையான செயல்களை அஃதாவது உதவிகளை - கொடையகைத் தான் இனிச் செய்ய முடியாத நிலை வந்துற்றதே என்று எண்ணி வருந்துகின்ற ஒரு தாழ்ச்சி நிலையே அவனது வறுமைநிலை.

மற்று, தானும் தன் குடும்பமும் உண்ணவும் உடுக்கவும் இல்லாத கவலைநிலை யன்று.