பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

145



- அமைதியற்றிருக்கும் நிலைமையாவது வருந்துதல். ஒப்புரவு செய்ய இயலாவாறு செல்வம் அற்ற விடத்து, பிறரை நுகர்வியாமை பற்றியே யன்றித் தான் நுகராமை பற்றி வருந்துவதில்லை யென்பதாம் என்று இதனை விளக்குவார், மொழிஞாயிறு பாவாணர்.

‘ஈட்டிய ஒண்பொருள் இல்லெனினும் ஒப்புரவு
ஆற்றும் குடிப்பிறந்த சான்றவன் - ஆற்றவும்
போற்றப் படாதாகிப் புல்லின்றி மேயினும்
ஏற்றுக்கன்(று) ஏறாய் விடும்’ - பழமொழி:217

'அடுத்தொன்(று) இரந்தாற்கொன் றீந்தானை, கொண்டான்
படுத்தேழை யாமென்று போகினும் போக
அடுத்தேறல் ஐம்பாலாய்! யாவர்க்கே யானும்
கொடுத்தேழை யாயினார் இல்’ - பழ : 218

‘பல்நீரால் பாய்புனல் பரந்துரட்டி இறந்தபின்
இல்நீரால் அறல்வார அகல்யாறு கவின்பெற
முன்ஒன்று தமக்காற்றி முயன்றவர் இறுதிக்கண்
பின்ஒன்று பெயர்த்தாற்றும் பீடுடை யாளர்போல்’ - கலி:54:2-5

'அறந்தலைப் பிரியாது ஒழுகலும் சிறந்த
கேளிர் கேடுபல ஊன்றலும் நாளும்
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்லெனச்
செய்வினை புரிந்த நெஞ்சினர்’ - அகம்:173:1-4

'நல்லார் பெரிதளியர் நல்கூர்ந்தார் என்றெண்ணிச்
செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் - கொல்லன்
உலையூதும் தீயேபோல் உள்கனலும் கொல்லோ
தலையாய சான்றோர் மனம்’ - நாலடி:298

‘எத்துணை யானும் இயன்ற அளவினால்
சிற்றறஞ் செய்தார் தலைப்படுவர்’ - நாலடி:272:1-2

'கொடுத்தளிக்கும் ஆண்மை யுடையவர் நல்குரவு
காண அரியன கண்’ - திரிகடு:71:3-4

'நிறைநெஞ்சு உடையானை நல்குரவு அஞ்சும்’ - திரிகடு:72:1

‘. . . . துளிஅஃகி
நல்குரவு ஆற்றப் பெருகிலும் செய்யாரே
தொல்வரவின் தீர்ந்த தொழில் - ஆசாரக் 56:4-5