பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

அ-2-18 ஒப்புரவறிதல் -22



'அட்டாலும் பால்சுவையிற் குன்றாது............
..................................................................................
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளே;சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்’ -வாக்குண்டாம்:41

‘சிரியர் கெட்டாலும் சிரியரே! சிரியர்மற்று
அல்லாதார் கெட்டால்அங் கென்னாகும் - சீரிய
பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும் என்னாகும்
'மண்ணின் குடம் உடைந்தக் கால்’ -வாக்குண்டாம்:18

‘சந்தனம் மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடா தாதலால் தந்தம்
தனம் சிறியர் ஆயினும் தார்வேந்தர் கெட்டால்
மனம்சிறியர் ஆவரோ மற்று’ -வாக்குண்டாம்:28

'நயவார்கண் நல்குரவு நாணின்று' - நாலடி:267:1

‘எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்
அறுநீர்ச் சிறுகிணற்(று) ஊறல்பார்த் துண்பர்
மறுமை அறியாதான் ஆக்கத்தின் சான்றோர்
கழிதல் குரவே தலை’ - நாலடி:275

‘சிறியவர் எய்திய செல்வத்தின் மாணப்
பெரியவர் நல்குரவு நன்றே - தெரியின்
மதுமயங்கு பூங்கோதை மாணிழாய்! மோரின்
முதுநெய்தி தாகலோ இல்’ - பழமொழி:89

‘சீர்த்தகு மன்னர் சிறந்தனைத்தும் கெட்டாலும்
நேர்ந்துரைத்து எள்ளார் நிலைநோக்கி’ - பழமொழி:383:1-2

‘கெடுவல் எனப்பட்ட கண்ணும் தனக்கோர்
வடுவல்ல செய்தலே வேண்டும் - நெடுவரை
முற்றுநீர் ஆழி வரையகத்து ஈண்டிய
கல்தேயும் தேயாது சொல்’ - பழமொழி:394

‘மிகப்பேர் எவ்வம் உறினும் எனைத்தும்
உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்
நல்லறி வுடையோர் நல்குரவு
உள்ளுதும் பெருமயாம் உவந்துநனி பெரிதே’ - புறம்:197:15-18