பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

149



‘தம்நயந்து உறைவோர் தாங்கித் தாம்நயந்து
இன்னமர் கேளிரொடு ஏமுறக் கெழிஇ
நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர்’ - அகம்:151:1-3

‘பாரியும் பரிசிலர் இரப்பின்
வாரேன் என்னான் அவர்வரை யன்னே’ - புறம்:108:5-6

'தம்மை மாறியும் புரிவது தருமம்’ - திருவிளைநாட்டு:59

4) ஒப்புரவுணர்வால் - பொதுமையறச் செயலால் வறுமையோ தாழ்ச்சியோ பிற என்ன கேடுவந்தாலும் அஃது இழிவன்று பெருமையே; அதனால் அதனைத் தன்னை இழந்தும் பெற்றுக் கொள்ளலாம் என்று முடித்துக் கூறினார்.