154
அ-2-19 ஈகை 23
ஆற்றுதல்:
'அற்றார்க்கொன்(று) ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று’
- 7067
‘ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்'
- 228
அதுமட்டுமன்று 'இவ்வுலகில் நாம் குடும்பம் குடும்பமாகக் குலம்குலமாக, இனம் இனமாக வாழ்வதும், ஆண்பெண்ணாகச் சேர்ந்து இல்லறம் பேணுவதும்கூட, மற்றவர்களுக்கும் உதவி, நாமும் இன்பம் பெறத்தான்' என்று வாழ்வியல் நுட்பம் கூறுவார் - அவர்
'இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு’
- 87
இவ்வாறு, ஆசிரியர் ஈகைத் தொடர்பாகப் பல்வேறு இடங்களில், பல்வேறு கோணங்களில் கூறும், பல்வகையான வாழ்வியல் தழுவிய துண்மைக் கருத்துகள் உணரத் தக்கன; உணர்ந்து கடைப் பிடிக்கத் தக்கன. அவற்றுள் சில:
‘பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு’
- 1002
'ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்(று)
ஈதல் இயல்பிலா தான்
- 953
'நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு’
- 953
- இவ்வாறு செய்யும் ஈகையறத்தையும் கூட, ஆறறிந்து (கொடுக்கும் முறையறிந்து), அளவறிந்து, (யார்க்கும், எதற்கு, எவ்வளவு என்னும் அளவறிந்து) ஈயச் சொல்லும் ஆசிரியரின் உலகியலும், மாந்தவியல் அறிவும் உணர்ந்து வியக்கத் தக்கதும் வியக்கத் தக்கதும் ஆகும்.
'ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி’
- 477
இனி, யாவற்றுக்கும் மேலாக, அவர் அனைவரையும் ஈதல் அறஞ்செய்யப் பணித்தவர், அதற்கென ஒருவரிடம் போய்க் கேட்கும் பொழுதும் சில உளவியலையும் உலகியலையும் எச்சரித்துக் கூறுதல் மிகவும் வியக்கத் தக்கதாம் என்க.
அஃதாவது, தம்மிடம் உள்ளதைக் கனவிலும் மறைக்காதவரிடம் போய்த்தான் ஒருவர் உதவி கேட்க வேண்டும் என்று, உதவி பெற விரும்புவார்க்கு உளவியல் அறிவு புகட்டுவார்.