பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

அ-2-19 ஈகை 23



‘ஈத்துண்பான் என்பான் இசை நடுவான்’ - நான்மணி:59:1

‘என்றும் முகமன் இயம்பா தவர்கண்ணும்
சென்று பொருள் கொடுப்பர் தீதற்றோர்.' - நன்னெறி:1

‘பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு
பிறர்க்குதவி ஆக்குபவர் பேறாம் - பிறர்க்குதவி
செய்யாக் கருங்கடல்நீர் சென்று புயல்முகந்து
பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு' - நன்னெறி:3

'முனிவினும் நல்குவர் மூதறிஞர் உள்ளக்
கனிவினும் நல்கார் கயவர் நனிவிளைவில்
காயினும் ஆகும் கதலிதான் எட்டிப்பழுத்(து)
ஆயினும் ஆமோ அறை’ - நன்னெறி:28

‘இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக
வன்சொல் களைகட்டு வாய்மை எருஅட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனும். . . .’ - அறநெறி:112:1-3

‘வாங்கும் கவளத்து ஒருசிறிது வாய்தப்பின்
தூங்கும் களிறோ. துயருறா - ஆங்கதுகொண்(டு)
ஊறும் எறும்பிங்(கு) ஒருகோடி உய்யுமால்
ஆருங் கிளையோ டயின்று’ - நீதிநெறி :37

‘கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர்’ - நல்வழி:29:3-4

(கற்றா - கன்று ஆ கன்றுடைய பசு)

'ஆறிடும் மேடும் மடுவும்போல்
ஆம்செல்வம் மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோ(று)இடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணிர்மை வீறும் உயர்ந்து’ - நல்வழி. 32

'நிரப்பிடும்பை மிக்கார்க்கு உதவ ஒன்றீதல்
சுரத்திடை தீரப் பெயல்’ - பழமொழி:169:3-4

‘படரும் பிறப்பிற்கொன் றியார் பொருளைத்
தொடரும் பற்றினால் வைத்திறப் பாரே
அடரும் பொழுதின்கண் இட்டுக் குடரொழிய
வேலி போக்கு பவர்' - பழமொழி:379