பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

அ-2-19 ஈகை 23


சேண்படு நிரப்பின் எய்தினோர், புரப்போர்த்
தீர்ந்தவர், தந்தையாய், குரவர்,
காண்தகும் உதவி புரிந்துளோர் - இனையோர்
ஒன்பதின் மரும் உளங் களிப்ப
வேண்டுறு நிதியம் அளிப்பின், மற்று,ஒன்றே
கோடியாம் எனமறை விளம்பும்! - காசிகாண்டம்.

‘காயா மரமும் வறளாம்
குளமும் கல்லாவும் என்ன
ஈயா மனிதரை ஏன்படைத்
தாய், கச்சி ஏகம்பனே!' - பட்டினத்தார்

'நீரினும் சாயல் உடையவன்
நயந்தோர்க்குத் தேரியும் வண்கை யவன்’ - கலி:42:20-21

‘இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க
வல்லான் போல்வதோர் வண்மையும் உடையன்' - கலி:47:5-6

'நிலந்தினக் கிடந்த நிதியமொடு அனைத்தும்
இலம்படு புலவர் ஏற்றகைந் நிறைய
......................................................ஈகை நல்கி’ - மலைபடு:575-580

'மண்ணுடை ஞாலத்து மன்னுயிர்க்கு எஞ்சாது
ஈத்து' - பதிற்:15:36

‘கண்ணகன் வைப்பின் மண்வகுத்து ஈத்து' - பதிற்.பதிகம்:3-5

'துப்புத் துவர்போக பெருங்கிளை உவப்ப
ஈத்தான்று ஆனா இடனுடை வளன்' - பதிற்:32:5-6

'மழைசுரந் தன்ன ஈகை’ - அகம்:238:13

'இரவன் மாக்கள் ஈகை துவல’ - புறம்:24:30

'செந்நீர்ப் பசும்பொன் வயிரியற்கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்’ - புறம்9:9-10

'அமிழ்து அட்டாணாக் கமழ்குய் யடிசில்
வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை’ - புறம்:10:7-8

‘வல்லா ராயினும் வல்லுநர் ஆயினும்