பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

159


வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள வல்லை ஆகுமதி’ - புறம்:27:15-17

'அதியமான் பரிசில் பெறுஉங் காலம்
நீட்டினும் நீட்டா தாயினும் யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் ததுவது பொய்யா காதே’ - புறம்:101:5-8

'எத்துணை யாயினும் ஈத்தல் நன்றென
மறுமை நோக்கின்றோ வன்றே
பிறர், வறுமை நோக்கின்று அவன்கை வண்மையே' - புறம்: 101:5-8

‘வரையா ஈகைக் குடவர் கோவே’ - புறம்:17:40

'நீரின்று அமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே’ - புறம்:18:18,19

‘ஈயா மன்னர் நாண
வியாது பரந்தநின் வசையில்வான் புகழே’ - புறம்:168:21,22

‘யார்க்கும் எளிதே தேர்ஈ தல்லே’ - புறம்: 123.2

‘இன்று செலினும் தருமே சிறுவரை
நின்று செலினும் தருமே . . . . .
ஈவோர் அரியஇவ் வுலகத்து
வாழ்வோர் வாழஅவன் தாள்வா ழியவே' - புறம்:171:1,2,14,15

‘உண்டால் அம்ம இவ் உலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே . . . . . . . . . . . . . .
 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
புகழெனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்.
 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே!' - புறம்:182

'நிற்பாடிய வலங்கு செந்நாப்
பிறரிசை நுவலாமை
ஒம்பா தீயும் ஆற்றல் எங்கோ