பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

161



நம் முன்னோர்களால் எத்துணையளவில் கடைப்பிடிக்கப் பெற்று வந்துள்ளதென்பதும், அவற்றை மேற்கொண்டவர்களின் செல்வச் செழிப்புகளை விட, அவர்களின் உள்ளச் செழிப்பு எத்துணை மேம்பாடும், பண்பாடும் கொண்டு விளங்கியுள்ள வென்பதும் நன்கு புலப்படும்.

அவற்றை விரித்துக்கூறாமல், சொல்லளவில் மட்டும் காட்டியிருப்பது, பெருக்கம் அஞ்சி என்க.

‘அளந்து கொடை அறியா ஈகை’ - புறம்:229:26

(அளந்துகொடுத்தல் அறியாத ஈகை)

'ஆனா ஈகை அடுபோர் அண்ணல்’ - புறம்:42:1

(அமையாத ஈகை ஒய்வில்லாத ஈகை)

‘உவரா ஈகை’ - புறம்:201:10

(வெறுப்பில்லாத ஈகை)

‘ஒடுங்கா உள்ளத்து ஒம்பா ஈகை’ - புறம்:8:4

'ஒம்பா ஈகை மாவேள் எவ்வி’ - புறம்: 24:18

'ஒம்பா ஈகை’ - பதிற்:42:13

(பொருளைப் பாதுகாவாத ஈகை)

‘கைவள் ஈகைப் பண்ணன்’ - புறம்:70:13

(கையால் வள்ளிய ஈகை)

‘தண்டா ஈகை’ - புறம்: 6:26

(தணியாத ஈகை)

'தவிரா ஈகைக் கவுரியர் மருக’ - புறம்: 3:5

‘தாழா ஈகைத் தகை’ - புறம்:369:28

(தாழ்வில்லாத நிரம்பிய)

'தாங்கா ஈகை நெடுந்தகை’ . - புறம்:325:15

(அளவிலாத ஈகை)

'தேற்றா ஈகை’ - புறம்: 140:9

(தெளிவில்லாத கொடை, ஒன்றுகேட்க அதனினும் பெரியது தருதல்)

'சேற்றுக் காலவயல் தென்னாறை வாணனைச்
சோற்றுக் கரிசிதரச் சொன்னக்கால் - வேற்றுக்