பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

163


ஒருதிசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்
பலரும் வருவர் பரிசின் மாக்கள்
வரிசை யறிதலோ அரிதே பெரிதும்
ஈதல் எளிதே மாவண் தோன்றல்
அதுநற் கறிந்தனை யாயின்
பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே. - புறம்: 121

இது, மலையமான் திருமுடிக்காரியைக் கபிலர் பாடியது.

‘பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கிப்
பணியியர் அத்தைதின் குடையே’ - புறம்:6:16-17

‘வரிசை யறிதலும் வரையாது கொடுத்தலும்’ - சிறுபாண்: 217

‘வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கை’ - புறம்: 47: 6

'முற்றிய திருவின் மூவர் ஆயினும்
பெட்யின்று ஈதல் யாம்வேண் டலமே’ - புறம்:205:1-2

(பெட்பு - விருப்பம்)

‘எழுஇனி நெஞ்சம்! செல்கம் யாரோ!
பருகு வன்ன வேட்கை இல்வழி
அருகிற் கண்டும் அறியார் போல
அகம்நக வாரா முகன்அழி பரிசில்
தாளிலாளர் வேளா ரல்லர்
வருகென வேண்டும் வரிசை யோர்க்கே
பெரிதே உலகம் பேணுநர் பலரே!' . - புறம்:207:1-7

'குன்றும் மலையும் பலபின் ஒழிய
வந்தனென் பரிசில் கொண்டெனன் செலற்கென
நின்ற என்நயந்(து) அருளி ஈதுகொண்டு
ஈங்கனம் செல்க தான்என என்னை
யாங்கறிந் தனனோ தாங்கருங் காவலன்
காணாது ஈத்த இப்பொருட்கு யான்ஒர்
வாணிகப் பரிசிலேன் அல்லேன் பேணித்
தினையனைத்து ஆயினும் இனிது, அவர்
துணையன அறிந்து நல்கினர் விடினே' - புறம்:208