உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

அ-2-19 ஈகை 23



(இது, அதியமான் நெடுமானஞ்சியிடம் சென்ற பெருஞ்சித்திரனாரைக் காணாது. இதுகொண்டு செல்க’ என்று அவன் பிறர்வழி, பரிசில் கொடுத்தனுப்ப, அதனைக் கொள்ளாது, அவர் கூறியது)

‘உயர்ந்துரந்து மருப்பின் கொல்களிறு பெறினும்
தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென் உவந்துநீ
இன்புற விடுதி யாயின் சிறிது
குன்றியும் கொள்வல் கூர்வேல் குமண!' - புறம்:159:22-25

(உயர்ந்து ஏந்திய மருப்பு(தந்தங்)களை உடைய கொல்யானையைப் பெறினும், முகம் திரிந்து தரும் பரிசிலைக் கொள்ளேன்; மகிழ்ந்து, நீ, யான் இன்புற விரைவாகத் தந்து விடுவையாயின் சிறியதாக குன்றிமணியளவுடைய பொருளாயினும், கூரிய வேலையுடைய குமணனே, நான் பெற்றுக் கொள்வேன்)

'வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்னறி யலன்கொல் என்னறி யலன்கொல்
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்துஎன
வறுந்தலை உலகமும் அன்றே அதனால்
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே' - புறம்:206:24, 6-9,13.

(இது அதியமான் நெடுமானஞ்சி பரிசில் நீட்டித்தானை ஒளவையார் பாடியது).

‘காதம் இருபத்து நான்கொழியக் காசினியை
ஒதக் கடல்கொண்(டு) ஒளித்ததோ - மேதினியில்
கொல்லிமலைத் தேன்சொரியும் கொற்றவா நீமுனிந்தால்
இல்லையோ எங்கட் கிடம்’ - கம்பர் பாடல்-தனியன்

‘மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ
உன்னையறிந் தோதமிழை ஒதினேன் - என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு' - கம்பர் பாடல்-தனியன்

'ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நா(டு)