பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

அ-2-19 ஈகை 23


என்ப.

‘பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
பரந்தோங்கு சிறப்பின் பாரி’ - புறம்: 200:9-12

‘சிறுவி முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்குவெள் எருவி வீழும் சாரல்
பறம்பிற் கோமான் பாரி’ - சிறுபாண்.:89-91

‘ஊருடன் இரவலர்க் கருளித் தேருடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசைப்
படுமணி யானைப் பறம்பிற் கோமான்
நெடுமாப் பாரி' - புறம் 201 : 2-5

'பறம்பு பாடின ரதுவே அறம்பூண்டு
பாரியும் பரிசிலர் இரப்பின்
வாரேன் என்னான் அவர்வரை யன்னே’ - புறம்:108 : 4-6

'ஆடினிர் பாடினிர் செவினே
நாடுங் குன்றும் ஒருங்கீ யும்மே' - புறம்:109:17-18

‘முந்நூ நூர்த்தே தண்பறம்பு நன்னாடு
முந்நூ றுாரும் பரிசிலர் பெற்றனர்’ - புறம்:110:3-4

‘முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
எல்லைநீர் ஞாலத்து இசைவிளங்கத் - தொல்லை
இரவாமல் ஈத்த இறைவர்போல் நீயும்
கரவாமல் ஈகை கடன்’ - புறப்.வெ. 194


2. ஒரி:

இவன் வல்வில் ஓரி, ஆதன் ஒரி என்னும் பெயர்களால் அழைக்கப் பெற்றான். கொல்லி மலைக்கும் அதைச் சார்ந்த நாட்டிற்கும் இவன் தலைவன். வன்பரணர், கழைதின் யானையார் என்ற புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர்.

‘சாரல் அருவிப் பயமலைக் கிழவன்
ஒரி . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . .. . . . . . . . . . . . . . . .. . . . .