பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

169


ஓங்கிருங் கொல்லிப் பொருநன்
ஒம்பா ஈகை விறல்வெய் யோனே! - புறம் 152:11,13-32.

‘மழையணி குன்றத்துக் கிழவன் ஆளும்
இழையணி யானை இரப்போர்க் கீயும்
சுடர்விடு பசும்பொன் சூர்ப்பமை முன்கை
அடுபோர் ஆனா ஆதன் ஒரி
மாரி வண்கொடை காணிய’ - புறம் :153:1-5


3. காரி :

இவன் பெண்ணையாற்றின் கரையில் உள்ள மலாடு என்று வழங்கும் மலையமா நாட்டின் அரசன். திருக்கோவலூரிலிருந்து (இற்றைத் திருக்கோயிலூர்) அவன் நாட்டை ஆண்டான். இவன் முள்ளூர் என்னும் மலையை உடையவன். இவன் மலையன் என்றும், மலையமான் திருமுடிக் காரி என்றும் அழைக்கப் பெற்றான். கபிலர், மாறோக்கத்து நப்பசலையார், குடவாயிற் கீரத்தனார் முதலிய புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர்.

‘வடமீன் புரையும் கற்பின் மடமொழி
அரிவை தோள்.அளவு அல்லதை
நினதென விலை,நீ, பெருமிதத் தையே! - புறம்:122:3-10

இதன் பொருள்: (இதில், கற்புசான்ற அவன் மனைவியின் தோள் தவிர, நின்னுடையது என்று சொல்ல வேறு ஒன்றும் உனக்கு உடைமையாக இல்லை (பிற பொருள்கள் அனைத்தையும் நீ இரவலர்க்கு ஈந்து பெருமை பெற்றாய்) என்று புலவர் புகழ்மொழியின் நயம் அறிந்து மகிழத் தக்கது)

‘தொலையா நல்லிசை விளங்கும் மலையன் - புறம்:123:3

‘வறிது பெயர்குநர் அல்லர் நெறிகொளப்
பாடான் றிரங்கும் அருவிப்
பீடுகெழு மலையன் பாடி யோரே’ - புறம்:124:3-5

‘மாரீ யிகை மறப்போர் மலையன்’ - புறம்:158:7

'துஞ்சா முழவிற் கோவற் கோமான்
நெடுந்தேர்க் காரி கொடுங்கான் முன்றுறைப்