பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

171


அணிபூண் அணிந்த யானை இயல்தேர்
அதியமான் பரிசில் பெறுஉங் காலம்
நீட்டினும் நீட்டா தாயினும் யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் ததுவது பொய்யா காதே’ - புறம்:101:1-8

‘அலத்தல் காலை யாயினும்
புரத்தல் வல்லன் வாழ்கவன் தாளே' - புறம்:103:11-12

'திங்கள் அன்ன வெண்குடை
ஒண்ஞாயி றன்னோன் புகழ்மா யலரே!' - புறம்:231:5-6

- கீழ்வரும் பாடலடிகள் அதியமான் மறைந்த பின்றை ஒளவையார் பாடிய அவலச்சுவை நிரம்பியவை.

‘இல்லா கியரோ காலை மாலை
அல்லா கியர்யான் வாழும் நாளே' - புறம்:232:1-2

இதன்பொருள்: (அவனையின்றிக் கழிகின்ற காலையும் மாலையும் இனி இல்லையாகுக யான் உயிர்வாழும் நாளும் எனக்கு ஒரு பயனும் இல்லாமையால், அவையும் அல்லவாகுக)

‘சிறியகள் பெறினே எமக்கீயும் மன்னே
பெரியகள் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே
சிறுசோற் றானும் நனியல கலத்தன் மன்னே
பெருஞ்சோற் றானும் நனிபல கலத்தன் மன்னே
...............................................................................................
நரந்தம் நாறும் தன்கையால்
புலவுநாறும் என்தலை தைவரும் மன்னே
..................................................................................................
அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ
இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவை சோர
அஞ்சொல் உண் தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்றுவீழ்ந் தன்றவன்
அருநிறத்து இயங்கிய வேலே