பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

173


பெருங்குன்றுார்கிழார் ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர்.

‘படாஅ மஞ்ஞைக்கு ஈந்த எங்கோ
கடாஅ யானைக் கலிமான் பேகன்
எத்துணை யாயினும் ஈத்தல் நன்றென
மறுமை நோக்கின் றோவன்றே
பிறர்,வறுமை நோக்கின்றவன் கைவண்மையே!' - புறம்: 141:11-15

‘கடாஅ யானைக் கழற்கால் பேகன்
கொடைமடம் படுதல் அல்லது
படைமடம் படான்பிறர் படைமயக் குறினே’ - புறம்:142:4-6

'மடத்தகை மாமயில் பனிக்குமென் றருளிப்
படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக’ - புறம்:145:1-3


6) ஆய் அண்டிரன் : இவன் அரசனல்லன். வேளாண் பெருங்குடி மகன். பெருநிலக் கிழான். ஆனால், அரசரால் கொடுக்கப்பெறும். 'வேள்’ என்னும் பட்டத்தைப் பெற்றவன். பெரும்வீரன் பொதியின் மலைக்குத் தலைவன். அதன் அருகில் உள்ள ஆய்குடி என்னும் ஊரினன். இவன் ஆய் என்றும், அண்டிரன் என்றும் ஆய்அண்டிரன் என்றும் அழைக்கப் பெற்றான். இவன் செல்வம் மிகுந்தவனாதலின். பெரும் வள்ளண்மை மிக்கவனாக இருந்தான். இரவலர்க்கும், புலவர்க்கும், பாணர்க்கும் வாரி வழங்கினான். அவர்களுக்கு யானைகளையும் பிறபொருள்களையும் மிகுதியாகக் கொடுத்தான் இவனுக்கு நீல நாகம் நல்கிய பட்டுடையை ஆலமரத்தின் கீழ் அமர்ந்த கடவுளுக்கு அளித்தான் என்று புலவர்களால் பாராட்டப் பெற்றவன். இவனைப் புகழ்ந்து உறையூர் ஏணிச் சேரிமுட மோசியார்,துறையூர் ஓடைகிழார், குட்டுவன் கீரனூர் ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர். தன் சொத்தையெல்லாம் இரவலர்க்கே வரையாது ஈந்து, இறுதியில் மிகவும் வறுமைப் பட்டு மாய்ந்தான். தன் மனைவியரின் பெற்றாலிதவிரப் பிற பொருள்கள் அனைத்தையும் (மலையும், நாடும், ஊரும், செல்வமும், விடும் இரவலர்க்குக் கொடுத்து ஏழையாகி மறைந்தான் என்பர்.

‘கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில்
ஆடுமகள் குறுகின் அல்லது
பீடுகெழு மன்னர் குறுகலோ அரிதே’ - புறம்:128:5-7

இதன்பொருள்:

(கழல் இடப்பெற்ற வீரவளையை உடைய ஆயது முகில் படியும் பொதியின் மலையை ஆடச் செல்லும் மகள் அணுகின் அல்லது