பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/183

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

181'அற்றார்க்கொன்(று) ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று’ - 1907

என்பவை அவை. இவற்றுள் முதலிரண்டு இடங்களிலும் வறுமையுடையவர்களையுங்கூடத் 'தக்கார்' என்னும் சொல் குறிக்கும்.

'அற்றார்’ என்னும் சொல் 'பொருளற்ற ஏழையையும்', வேறு 'துணையற்றார்' என்னும் பொருள்களையுங் குறிக்கும்.

- ஆனால், 'ஈகை’ என்னும் செயலுக்கு இலக்கணம் குறிக்கும் இவ்விடத்தில் மட்டும், அவர், 'வறியார்க்கு’ என்னும் சொல்லைப் பெய்தது, 'ஏழையர்க்குச் செய்வதுதான் ஈகை’ என்று தெளிவுறுத்தவே ஆகும், என்க.

'ஆற்றுதல் என்ப தொன்று அலந்தவர்க்கு உதவுதல்' - கலி:133:6

‘பயன்நோக்கா(து) ஆற்றவும் பாத்தறிவு ஒன்றின்றி இசைநோக்கிச் செய்கின்றார் ஈகை
................................................................
கூலிக்குச் செய்துண்ணும் ஆறு' - பழமொழி:40:1,2,4

‘ஏற்றகை மாற்றாமை என்னானும் தாம்வரையாது
ஆற்றாதார்க்கு ஈவதாம் ஆண்கடன் - ஆற்றின்
மலிகடல் தண்சேர்ப்ப! மாறீவார்க்கு ஈதல்
பொலிகடன் என்னும் பெயர்த்து' - நாலடி: 98

‘இம்மை செய்தது மறுமைக் காம்எனும்
அறவிலை வணிகன் ஆய்அலன்' - புறம்:134:1-2

'ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை’ - மணி:11:92-94

‘வைப்பானே வள்ளல் வழங்குவான் வாணிகன்’ - சிறுபஞ்ச:30

‘இம்மையாற் செய்ததை இம்மையே யாம்போலும்
உம்மையே யாம் என்பர் ஓரார்காண்' - திணைமாலை:123

'தொடுத்த வறுமையும் பயனும் தூக்கி வழங்குநர்போல்’ - திருவிளை. வாதவூ: 3

'ஆற்றா மாக்கட்கு ஆற்றுந் துணையாகி' - மணிமே:17:54

‘சிறுநன்றி இன்றிவர்க்குயாம் செய்தக்கால் நாளைப்