உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

185



‘மேலோர் உலகம் எய்தினன்’ - புறம் 229:22

‘காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப
மேலோர் உலகம் எய்தினன்’ - புறம்:240:6

- இவை தவிர,

'மேல்நிலை உலகம்' என்று ‘சிலப்பதிகாரத்திலும் (28.138, 30.124 கூறப் பெறுகிறது.

- இவையன்றித் தேவர், தேவர் உலகம், அமரர், இந்திரன், இந்திரர், இந்திரதிருவன், வானோர், வானுறை மகளிர், வான்தேவர், வான்பதி, வானகத்தார், வானகக் கடவுளர், வாணர மகளிர், வானவர், வானவ மகளிர், வானவன், வான வாழ்க்கையர், வானோர், விசும்பிற்கோன் (இந்திரன்), விண்ணவர்கோன், விண்ணவர் தலைவன், விண்ணோர், அமரர், அமரர்க்கரசன், அமரர் கோன், அமராபதி, புத்தேள் உலகம், புத்தேள் நாடு, புத்தேளிர் கோட்டம் - என்றெல்லாம் பலவாறாகத் தொல்காப்பியம் முதல், கழக இலக்கியங்களான பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிலெல்லாம் பேசப் பெறுகின்றன.

- திருக்குறளிலும் அமரர் (12) தேவர்(1073), அவ்வுலகம் (247), அகல் விசும்புளார் கோமான் - இந்திரன் (25), புத்தேளிர் வாழும் உலகு (58), புத்தேள் உலகம் (213, 234, 290), புத்தேள் நாடு(966,1323) இருள் சேர்ந்த இன்னா உலகம் (நிரயம், நரகம்) (243) அளறு நிரயம், நரகம் (255, 835, 919), வானோர்க்கு உயர்ந்த உலகம் (346) தாமரைக்கண்ணான் உலகு (1103) - என்றெல்லாம் சொற்கள் வருகின்றன.

- இச்சொற்களும் சொற்களுக்கான பொருள்களும் திருக்குறளுக்கு மாசு கற்பிப்பனவாகக் கருதிக்கொண்டு இற்றை நூலறிபுலவோர் சிலரும், உரையாசிரியர் சிலரும், அறிவியல் புலவோர் சிலரும், இச்சொற்களுக்கெல்லாம் அவரவர் மனமும் அறிவும் சென்ற வாறெல்லாம் ஆளுக்கொரு விளக்கமாகச் சொல்லிக் கொண்டுள்ளனர். இவை அறிவியலுக்கும் மெய்யறிவியலுக்கும் வரலாற்றியலுக்கும் பொருத்தமான போக்குகள் அல்ல.

- திருவள்ளுவராகிய இந்நூலாசிரியர் இற்றைக்கு ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்திருந்தவர் என்பது வரலாற்றாசிரியர் பலராலும் ஒப்புக் கொள்ளப் பெற்ற செய்தியாகும்.

- ஆரியமும், வேதவியல் கருத்துகளும் அவர்காலத்துக்கு ஏறத்தாழ ஐநூறு முதல் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே தமிழகத்தும், தமிழர்களிடையேயும் கால்கொள்ளவும் மனங்கொள்ளவும் நூல்பயில்வு