பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

189


2) தன்னிடத்து இரந்தவன் மீண்டும் பிறனிடம் போய் 'தான் இல்லாதவன்'என்று கூறாதபடி கொடுத்தல்.

3 கொடுப்பவன் குறைவாகக் கொடுப்பதைப் பெற்றவன் பிறரிடம் போய் ‘அவனும் இல்லலாதவன் போல் இருக்கிறது' என்று இழிவாகக் கூறாதபடி கொடுத்தல், - இம் மூன்றுரைகளுள், முதலிரண்டும் மிகப் பொருந்துவன. எனவே அவ்விரண்டையும் ஒன்றாக்கி இங்குத் தரப் பெற்றது. மூன்றாம் நிலை உரை ஒருவாறு பொருந்துவதால், அதனையும் துணையுரையாகக் கொள்வதால் பிழையில்லையாம் என்க.

2) குலனுடையான் கண்ணே உள: நல்ல குடிமரபில் வந்தவனிடம் உள்ள குணமாகும்.

- இது தொடர்பாக, ஆசிரியர் பிறவிடங்களிலும் பிற கோணங்களிலும் கூறுவனவும் இங்கு இணைத்துக் கருதத் தக்கனவாம் என்க. அவை:

‘கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வைய்க்கு அணி - 701

‘குறிப்பில் குறிப்புணா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்’ - 705

'நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு’ - 953

‘கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்னின்று
இரப்பும்ஒர் ஏஎர் உடைத்து’ - 1053
 
‘அருத்தியின் 'இலன்'என் னாமுன்
அளித்தலும், இலன் என்று அப்பால்
உரைத்தில் னாகச் சால
உதவலும், ஏற்கின் றானும்
வருத்துற(வு) இலனென் னாமை
வழங்கிட, வரைவில் செல்வம்
பொருத்தலும் ஒன்றின் ஒன்று
புகழ்மிக விளங்கி நிற்கும்’ - விநாயக புராணம்

‘கொடையொடு பட்ட குணனுடை மாந்தர்’ - நாலடி:91:4

‘உரையாமை முன்னுணரும் ஒண்மை உடையார்’ - நாலடி:292.