பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

அ-2-19 ஈகை 23


“மிகப்பேர் எவ்வம் உறினும் எனைத்தும்
உணர்ச்சி யில்லோர் உடைமை உள்ளோம்’ - புறம்:197:15-16

‘செருமான வேற்சென்னி தென்னுறந்தை யார்தம்
பெருமான் முகம்பார்த்த பின்னர் - ஒருநாளும்
பூதலத்தோர் தம்மைப் பொருள்நசையால் பாராவாம்
காதலித்துத் தாழ்ந்திரப்போர் கண்’ - பழம்பாடல்

3) முன் குறளில், 'மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று' என்று கூறியவர்,ஈதலுக்கு மேலும் ஒரு நுட்பச் சிறப்பு இதில் கூறியதால், இதனை அதன் பின் வைத்தார். என்க.


உஉ௪ . இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு. – 224

பொருள்கோள் முறை:

இரந்தவர் இன்முகம் காணும் அளவு
இரக்கப் படுதல் இன்னாது.

பொழிப்புரை: தன்னிடத்து ஒரு பொருளைக் கேட்டுப் பெற வந்தவரின் முகம் மலர்ச்சி அடையும் அளவுக்கு அவர்மேல் இரக்கப்பட்டுக் கொடுப்பதும் துன்பம் தருவதே.

சில விளக்கக் குறிப்புகள்:

1)இரந்தவர் இன்முகம் காணும் அளவு தன்னிடத்து ஒருபொருளைக் :கேட்டுப் பெற வந்தவரின் முகம் மலர்ச்சி அடையும் அளவுக்கு, இன்முகம் இனிய முகம் தேவைக்கேற்ற அளவு பெற்ற நிலையால் முகம் மலர்ச்சி அடைதல்,

காணும் அளவு: அவ்வாறு முகம் மலர்ச்சி அடையும் அளவுக்கு.

- முகம் மலர்ச்சி அடைதல் தேவை கிடைத்ததே என்று மனம் நிறைவடைதல்,

மனம் நிறைவடைந்ததை முகம் மலர்ச்சி அடைவதன்வழி அறிதல், இயலும் என்க. என்னை?

‘முகத்தினும் முதுக்குறைந்தது உண்டோ
உவப்பினும் காயினும் தான்முந் துறும்' - 707