பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

அ-2-19 ஈகை 23


194 அ-2-19 ஈகை 23

. எனவே, பண்டை அரசரும் அறவாணரும், ஏழையர்க்கும் இரந்தார்க்கும் புலவோர்க்கும் பசி களைதலையே தங்களின் வாணாட் பேரறமாகக் கொண்டு ஒழுகினர் என்க.

‘வயிரிய மாக்கள் கடும்பசி களைய’ - பதிற்:23:6 ‘பசியுடை ஒக்கலை ஒரீஇய

இசைமேந் தோன்றல்’ - பதிற்:54:19-20 ‘விசிபிணி முடிவின் குட்டுவன் காப்பப் பசியென அறியாப் பணையில் இருக்கை’ - அகம்:91:14-15 ‘கடும்பின் கடும்பசி களையுநர்’ - புறம்:668:2 “மெய்யது புரவலர் இன்மையில் பசியே’ - புறம்:59:2 ‘கசிவுற்றவென்ன பல்களையொடு பசியலைக்கும் பகையொன்று என்கோ’ - புறம்:136:8-9 ‘இரும்பேர் ஒக்கலொடு தின்ம்எனத் தருதலின் அமிழ்தின் மிசைந்து காய்பசி நீங்கி - புறம்:150:13-14 ‘ஈத்த நின்புகழ் ஏத்தித் தொக்கவென் பசிதினத் திரங்கிய ஒக்கலும் உவப்ப - புறம்:159:20-21

‘பசிதினத் திரங்கிய கசிவுடை யாக்கை அவிழ்புகு அறியா தாகலின் வாடிய நெறிகொள் வரிக்குடல் குளிப்பத் தண்ணெனக் குய்கொள் கொழுந்துவை நெய்யுடை அடிசில் மதிசேர் நாண்முன் போல நவின்ற சிறுபொ லன்கலஞ் சுற்ற விரீஇக் கேடின் றாகப் பாடுநர் கடும்பென அரிதுபெறு பொலங்கலன் எளிதினின் வீசி

நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன்’ - புறம்:160:4-12 ‘கடும்பின் கடும்பசி தீர யாழநின் நெடுங்குறி யெதிர்ப்பை நல்கி யோர்க்கும்’ - புறம்:163:3-4 ‘வாடுபசி யருத்திய பழிதீர் ஆற்றல்’ - புறம்:227:7 ‘கடும்பசி கலக்கிய இடும்பைகூர் நெஞ்சம்’ - புறம்:230:9 பதடி நின்ற பசிநாட் கண்ணே கோடைக் காலத்துக் கொடுநிழல் ஆகி. - புறம்:237:2-3 நீணிறச் சிதாஅர் களைந்து வெளியது உடிஇஎன் பசிகளைந் தோனே - புறம்:385:6-7

‘வானறி யலவென் பாடுபசி போக்கல்’ - புறம்:390:27