பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

195


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 195

இனி, தவம் என்பது தன் உயிர்தான் அறப் பெறுதல் ஆகிய ஒரு முயற்சி. - 268

- தவத்திற்கு விளக்கம் கொடுக்கையில் பரிமேலழகர், தமக்குற்ற இயல்புப் படி, அநித்தமாய் மூவகைத் துன்பத்ததாய் உயிரின் வேறாய உடற்கு வருத்தம் வரும் என்று ஒழியாது தவத்தினைச் செய்ய, பிறப்புப் பிணி மூப்பு இறப்புக்களான் அநாதியாகத் துன்பம் எய்தி வருகின்ற உயிர், ஞானம் பிறந்து, வீடு பெறும் ஆகலின் தவம் செய்வார் என்பார். - 256 குறள் விளக்கம்.

- அஃதாவது, தவம் செய்பவர் தம் உயிர் மீண்டும் பிறப்பு இறப்புகளால் துன்பம் எய்தக் கூடாது என்னும் நோக்கத்தில், தம்முயிர்க்கு மட்டும் நன்மை தேடவும், தாம் மட்டும் உய்ந்து போகவும் ஆன தந்நல முயற்சியில் மட்டும் ஈடுபடுவார். அவர் மற்றவர்களைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படுவதிலர். பொதுநலம் என்கிற உணர்வே அவர்க்கிருப்பதில்லை. தாமுண்டு, தம் உயிருண்டு, உடலுண்டு என்றும், அவற்றை ஈடேற்றிக் கொள்வதே தம் கடமை என்றும், தம்மைப் பற்றியே எண்ணம் உடையவராகித் தம் நலத்துக்குரிய செயல்களிலேயே ஈடுபடுவார். என்னை? -

‘தவம் செய்வார் தம் கருமம் செய்வார்’ - 260

என்றார், ஆசிரியரும்.

- இவ்வாறாகத் தவம் செய்வார் தந்நலத்திற்காகத் தமக்குற்ற கருமத்தையே செய்து கொண்டிருக்கையில், தானம் அஃதாவது, ஈகையறம் செய்வார். தமக்குற்ற உலகியற் கடமைகளையும் செய்து கொண்டு பிறர்க்குற்ற பசிக் கொடுமையையும், வறுமை நோயையும் போக்குகின்ற முயற்சியில் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர்’ (அகம்:54 (மணி:5:73) -

பிறர்க்கு அறமுயலும் பெரியோன்’ ஆக, - மணி:11:63 ‘தன்னுயிர்க் கிரங்கா பிறவுயிர் ஒம்பும் - மன்னுயிர்ப் புதல் வனாக’ - முணி:25:116-117 ‘தனக்கென்று ஒன்றானும் உள்ளான்(நினையான்)

பிறர்க்கே உறுதிக்கு உழந்தான்’ - குண்டல.கடவுள்

‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் - புறம்:183:1

வாழ்கின்ற மக்கள் நலன் கருதுபவனாக, பொதுமையறமும், பொதுநலமும்

பேணி, -

‘இருள்படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும் அருள் நன்கு உடையனாக’ - அகம்:335:1-3