பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

அ-2-19 ஈகை 23


196 அ-2-19 ஈகை 23

‘தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு’ . - 212

- ஆகவே, இறுதிவரை உறுதிமாறாது வாழ்ந்து பெரும்புகழ்பெறுகிறான்.

‘வழியராய் நட்டார்க்கு மாதவம் செய்வாற்’ - பழ:13:3 தத்தமக்கு கொண்ட குறியோ மனம் ஒத்துச் சமத்தனாய் நின்றொழுகும் சால்பு தவமே’ - பழ:95:1,3 ‘உடம்புஒழிய வேண்டுமேல் உயர்தவம்; மற்றீண்டு இடம்பொழிய வேண்டுமேல் ஈகை’ - சிறுபஞ்ச4:1-2 ‘தவம் எளிது; தானம் அரிது’ - ஏலாதி:30:1

- மேலும், தவம் செய்வதாகக் கூறிக்கொள்பவனிடத்தில் தான்

கூடாவொழுக்கம்’ என்னும் கரவொழுக்கம்

மறைவொழுக்கம்-உள்ளதாக ஆசிரியர் கருதுவார். (தவம் அதிகாரத்தை அடுத்துக் கூடாஒழுக்கம் அதிகாரம் வைத்திருப்பதை

ஊன்றி உணர்க, துண்ணிதின் அறிக)

- தவமுயற்சி ஒழுங்காகப் பழுதின்றிப் படிறின்றிக் கரவின்றிச் செய்யப் பெற்றால் செய்பவனுக்காகிலும் நன்மை கிடைக்கும். இல்லெனில் தீமையே வரும்.

‘தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து

வேட்டுவன் புன்சிமிழ்த் தற்று’ – 274 ‘நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து - வாழ்வாரின் வன்கனார் இல்’ - - 276

என்றும், இன்னும் பலவாறும் ஆசிரியர் கூறுவது, தவ முயற்சியுள் நிகழும் அல்லது நிகழ்த்தப் பெறும் இழுக்குகளையும், ஒழுக்கக் கேடுகளையும் பற்றியே என்க.

‘இம்மைத் தவமும் அறமும் எனஇரண்டும் தம்மை உடையார் அவற்றைச் சலம்ஒழுகல் இம்மைப் பழிஏயும்; அன்றி மறுமையும் தம்மைத்தாம் ஆர்க்கும் கயிறு - பழமொழி:346 - என்றார், பிறரும். - மேலும், காட்டில் சென்று தவம் செய்து, தன் பொருட்டான முயற்சியினும், இல்லறத்தின்கண் நின்று ஈதல் அறம் செய்து, உலகவுயிர்களுக்கு நலஞ்செய்து வாழ்தலே தக்கது. உயர்ந்தது என்பது ஆசிரியர் கருத்தாம்

என்க.