பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/200

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

அ-2-19 ஈகை 23


198 அ-2-19 ஈகை 23

இஃதிவ்வாறிக்க, பரிமேலழகர் உரைக்கு தெளிபொருள் விளக்கம் எழுதிய புலவர் கோ. வடிவேலு (1904) அவர்கள் பரிமேலழகரினும் மேற்சென்றாராக, ஒரு பொருந்தாப் புனைவழக்கைக் கூறி அளவையாடுதலும் இங்குக் கவனித்து மறுக்கத் தக்கதாம் என்க.

பரிமேலழகர், இவ் வொப்பீட்டளவையை விளக்கும் பொழுது,

தாமும் பசித்துப் பிறரையும் அப்பசி தீர்க்க வொட்டாத தவத்தினரது வல்லமையிலும், தாமும் பசியாது, பிறரையும் அப்பசி தீர்ப்பவராகிய இல்லறத்தாரது வல்லமை நல்லது என்பதாம் - என்பார்.

இவருக்கும் காலத்தால் முற்பட்ட உரையாசிரியர்களாகிய, மணக்குடவர், ‘பெரியாரது பெருமையாவது, பசியைப் பொறுத்தல்; அதுவும் பெரியதாவது, பிறர் பசியைத் தீர்ப்பாரது பெருமைக்குப் பின்பு என்றவாறு என்று கூறி, இது, தவம் பண்ணுவாரினும் தானம் பண்ணுவார் வலியுடையார் என்றது என்று முடிப்பர்.

- இனி, பரிதியார்,

ஆற்றுவார் பசி ஆற்றலே பெரிது; அவன் சருகு பொசித்துத் தவம் பண்ணுவாரிலும் பெரியனாம். எப்படி என்றால், சருகு பொசிப்பார் ஒருவரையும் பசியாற்றமாட்டார்; தன் ஆத்துமாவையும் ஒறுப்பார்: ஆகையால் இவனுக்கு அவர்கள் சரியல்லர் என்றவாறு - என்பார். - இனி, காலிங்கர்,

‘தவம் மானம் முதலாகிய அனைத்துக் காரணங்களையும் தாம் இயற்றுகின்ற அறநெறிக்கு வழுவுதலுண்டாகாமே அவற்றின் மதங்களை ஆற்றி ஒழுகுவாருடைய ஆற்றலின் மிக்க தவமாவது யாதோ எனில், பசியை ஆற்றலலாகின்ற பெருந்தவமானது வறியவர் வந்தால் அப்பசிப் பிணிக்கு மருந்தாகிய அமுதம் கொடுத்து மற்றதனை ஒழிப்பாரது புண்ணியத்திற்குப் பின் என்றவாறு’ - என்பார். - சங்கு இவ்வாறு இத்தனையரும் கூறிய கூற்றுக்குப் பின்னரும், இயல்பான தம் வேதவியற் கோட்பாட்டினை ஏதோ தாந்தாம் உயர்த்திப் பிடிக்கக் கடமைப் பட்டவர்போல, அவ் வடிவேற் புலவர், துறவியர்க்குத் துணை நிற்பாராகிக் கீழ்வருமாறு அல் விளக்கம் கூறியிருப்பது வியப்பை அளிக்கிறது. அது, -

- துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை யெண்ணிக் கொண்டற்று என்றும், செயற்கரிய செய்வார் பெரியர் என்றும், தவஞ்செய்வார் தங்கருமம் செய்வார் என்றும், துறவறத்தாரை உயர்த்திக் கூறி, துறந்தார்க்குதுப்புரவு வேண்டி மறந்தார் கொன் மற்றையவர்கள்