பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/204

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

அ-2-19 ஈகை -23


இதனைப் பிறநூல் ஆசிரியரும் ஒப்புவர்.

நின்று

தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்

தலையாலே தான்தருத லால்’
- வாக்குண்டாம்:1

‘அறத்தின் ஈட்டிய ஒண்பொருள் அறவோன்

திறத்து வழிப்படுஉம் செய்கை போல’
- மணிமே:உலக:3-4

‘வைத்ததனை வைப்பு என்று உணரற்க, தாமதனைத்
துய்த்து வழங்கி இருபாலும்-அத்தகத்
தக்குழி நோக்கி அறஞ்செய்க, அஃதன்றோ

வைப்பினில் எய்ப்புஎன் பது
- பழமொழி:37

‘சிறந்து நுகர்ந்துஒழுகும் செல்வம் உடையவர்
அறம்செய்து அருளுடையர் ஆதல் . . . . . .
......................................அதுவே

சுமையொடு மேல்வைப்பா மாறு’
- பழமொழி:215

‘முன்பெரிய நல்வினை முட்டின்றிச் செய்யாதார்
பின்பெரிய செல்வம் பெறலாமோ? - வைப்போடு
இகலிப் பொருள்செய்ய எண்ணியக்கால் என்னாம் ?

முதலிலார்க்(கு) ஊதியம் இல்'
- பழமொழி:312

‘உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பு இன்னா’

- இன்னா16:1

‘பெற்றி கருமம் பிழையாமல் செய்குறின்
பற்றின்கண் நில்லாது அறஞ்செய்க - மற்றுஅது
பொன்றாப் புகழ்நிறுத்திப் போய்ப்பிறந்த ஊர்நாடிக்

கன்றுடைத் தாய்போல் வரும்’
- அறநெறி:61

“அவருக் கென்ன கொடுத்து வைத்தவர்’
- சொலவடை

3) இதில், பொருள் வைப்புழி என்னும் சொற்களுக்குப் பாவாணர், ‘அறச்செயலால் ஒருவன் தான் தேடிய செல்வத்தை மறுமையில் தனக்குப் பயன்படுமாறு சேமித்து வைக்கும் ஏம வைப்பகத்தைப்(Savings Bank) பெற்றானாவன் என்று மறுமைப் பொருள் கூறுவது வேண்டாதது. பொருளற்றது. பரிமேலழகரே இயல்பாயிருக்க, பாவாணர் மறுமை கூறியது வியப்பும் வீணுமாகும்.