பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

அ-2-19 ஈகை 23


2O6 அ-2-19 ஈகை 23

‘இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்’ - 629 3) முன்னைய குறளில் கூறப்பெற்ற அற்றார் அழிபசிதீர்த்தல் என்னும் அருளாண்மைக்கு ஒருமேல் விளக்கமாகிய பாத்துரண் மருவதலையும், பொருள்வைப்புழி என்னும் சேமிப்புக்கான ஒரு மேல் விளக்கமாகிய தீப்பிணி தீண்டல் அரிது என்பதனையும் இதில் கூறுவதால், அதன் பின்னர் இஃது அடி கொண்டது.

உஉஅ. ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை

வைத்திழக்கும் வன்க ணவர். – 228

பொருள்கோள் முறை:

தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கணவர், ஈத்து உவக்கும் இன்பம் அறியார் கொல்.

பொழிப்புரை தாம் அரிதின் முயன்று ஈட்டிய பொருளைக் காத்து வைத்துப் பின்னர் யாதாம் ஒரு வழியில், அதனை ஒருசேர இழக்கும் கொடிய மனம் படைத்தவர்கள், பிறர்க்கும் அதை ஈந்து அதனால் வரும் இன்பத்தை அறியாதவர்களோ?

1) தாம் உடைமை வைத்திழக்கும் வன்கண் அவர்: தாம் அரிதின் முயன்று ஈட்டிய பொருளைக் காத்து வைத்துப் பின்னர் யாதாம் ஒரு வழியில் அதனை ஒருசேர இழக்கும் கொடிய மனம் படைத்தவர்கள். தாம் உடைமை : தாம் ஈட்டிய உடைமை, தாம் அரிதின் முயன்று ஈட்டிய

பொருள். .

உடைமை யாகும் பொருள்தாமே அரிதின் முயன்று ஈட்டியதாதல் வேண்டும். வைத்து இழக்கும்:காத்து வைத்துப் பின் யாதாம் ஒரு வழியில் அதனை

ஒருசேர இழக்கும். . . . . . - - வைக்கப்பெற்ற பொருளை இழத்ததற்குப் பல வழிகளும் உண்டாகையால்,

அவற்றுள் ஏதோ ஒரு வழியில் இழத்தல் வேண்டும் என்க.