பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

அ-2-19 ஈகை 23


214 அ-2-19 ஈகை 23

பொழிப்புரை சாவதைவிடத் துன்பமானது உலகில் வேறு இல்லை. அந்தச் சாவும்கூட, ஈகை மனம் கொண்டவனுக்கு, வறியவர்க்கு ஒன்று ஈயமுடியாத பொழுது இனியது.

சில விளக்கக் குறிப்புகள்:

சாதலின் இன்னாதது இல்லை: சாவதைவிடத் துன்பமானது உலகில் வேறு இல்லை. சாதல் உயிர் உடலை விட்டுப் பிரிதல்.

இன்னாதது. துன்பமானது கொடியது.

சாதலைவிடக் கொடியது உலகில் இல்லை என்பது வழக்குரை. - ஆனால், சிலர் சாதல் துன்பமிலை என்பர்.

- அஃதாவது நோய் நொடியால் சாவதே துன்பமானது. அவையின்றித்

திடுமென - சாவது துன்பமில்லை என்பர்.

ஆசிரியரும் அதை ஒப்புவர். என்னை?

‘குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே

உடம்போடு) உயிரிடை நட்பு’ - 338 ‘உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு’ - 339

- மேலும் ஒருவர் ஒரு கொள்கையின் பொருட்டோ, அல்லது போரிலோ இறப்பதை வீரச்சாவு என்று புகழ்வர். அத்தகைய சாவு விரும்பி வரவேற்கத் தக்கது என்பார் ஆசிரியர்.

“சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்

கழல்யாப்புக் காரிகை நீர்த்து - 777 ‘உறின் உயிர் அஞ்சா மறவர் இறைவன்

செறினும் சீர் குன்றல் இலர்’ ... 778 இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே

பிழைத்தது ஒறுக்கிற் பவர்’ . - 79

- இவை ஆசிரியர் படைத்த சாதலுக்கு அஞ்சா வீர மறவர்தம் கூற்று.

- இவர் போல் வேறு மறவர் சிலரும் சான்றோர் பிறரால் காட்டப்

பெறுவர்.

போரெனில் புகலும் புனைகழல் மறவர்’ - புறம்:31:9