216
அ-2-19 ஈகை 23
216 - அ-2-19 ஈகை 23
பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின்’ - நற்:397:7-8
. . . . . . . . . . . . யாக்கைக்கு உயிர்இயைந் தன்ன நட்பின், அவ்வுயிர் வாழ்தல் அன்ன காதல் சாதல் அன்ன பிரிவுஅரி யோளே - அகம்:329:11-14 - இனி, இத்தனைக்கும் மேலாகக் கூறப்பெறுவதுதான், ஈதல் இயையாத பொழுது, சாதலும் இனியது, பெருமையது, புகழ்பெறுவது, உலக நலத்துக்கு எடுத்துக் காட்டாக இருப்பது, என்க. 2. அது உம், ஈதல் இயையாக்கடை இனிது அந்தச சாவும்கூட ஈகை மனம் கொண்டவனுக்கு, வறியவர்க்கு ஒன்று ஈய முடியாத பொழுது இனியது. அது உம் அதுவும். இன்னிசை அளபெடை இயையாக் கடை இயையாத முடியாதபொழுது. கடை இடத்து
- என்றும் பொருள்படும். இனிது. இனியது, சிறந்தது. அந்தச் சாதலும், ஈகை மனம் கொண்டவனுக்கு அவ் வீதல் இயையாத
பொழுது இனியதாகும். - இவ்விடத்து உரையாசிரியர்கள் துட்பமான ஒரு பொருளை
வெளிப்படுத்தாமல் விட்டிருப்பது கவனிக்கத் தக்கது. அஃது, இந்த உணர்வு, அஃதாவது ஈதல் இயையாத விடத்துச் சாதல் இனியது என்ற அளவில் எல்லார்க்கும் பொதுவானதுபோல் உரைதந்திருக்கின்றனர். ஆனால், அவ்வுணர்வு பொதுவாக எல்லார்க்கும் இருக்கின்ற உணர்வன்று. அந்த ஈகையுணர்வு மிகுந்து தோன்றும் உள்ளம் உடையவர்களுக்கே, அவ்வாளுமை உணர்வு இருக்கும். எனவேதான், ஈகை மனம் கொண்டவர்க்கு என்று சிறப்பித்துச் சொல்ல
வேண்டுவதாயிற்று, என்க. மேலும் ஆசிரியர், சாதலும் இனிமை தருவதாக, சிறந்த செயலாக, அவம் நீக்கும் செயலாக இருக்கின்ற பிற நிலைகளையும் நூலுள் சுட்டியுள்ளதும் இவ்விடத்துக் கவனிக்கத் தக்கது. அவை:
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலில் சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும்’ - 183 ‘தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது