உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

217


திருக்குறள் மெய்ப்பொருளுரை_பெருஞ்சித்திரனார் 217

இன்னுயிர் நீக்கும் வினை’ - 327 புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து’ - 780

ஈதல் இயையாத பொழுது, சாதலுறும் உணர்வைச் சான்றோர் பிறரும்

சுட்டுவர்.

‘செருஅது, ஈதல் இரந்தார்க்கு ஒன்று ஆற்றாது வாழ்தலின் சாதலும் கூடுமாம் மற்று’ - கலி:61:11.12

- ஈதல் இயையாத நிலையில் உயிர்விடவும் துணிந்த பேராளன் ஒருவனின்

வரலாறு இலக்கியத்துள் உண்டு.

- அவன் குமணன். முதிர மலைக்குத் தலைவன். கழக எழுவள்ளலர்க்குப் பிந்திய காலத்தவன் (புறம்:58) அவன் தம்பி இளங்குமணன் (அவன் பெயர் அமணன் என்று கூறுப) என்பானால் நாடு கொள்ளப்பட்டுக் குமணன் காடுபற்றிக் கரந்து வாழ்ந்திருந்தான். அக்கால் அவன் தம்பி, தன் தமையன் தலைக்கு விலைவைத்துக் கொணரக் கோரியிருந்தான். அக்கால் புலவர் பெருந்தலைச் சாத்தனார் என்பார், காட்டில் மறைந்திருந்த குமணனைக் கண்டு, தம் வறுமை கூறி வருந்தினர். அக்கால், தம்பி தன் தலைக்கு விலைவைத்துக் கூறியிருந்த செய்தி கூறித் தன் தலையினைக் கொடுபோய்த் தம்பி கை கொடுத்ததன் விலையினைப் பெற்று நும் வறுமை தவிர்க்க என்று கூறித் தன் இடைவாள் எடுத்துக் கொடுத்தனனாக, அது பெற்ற புலவர் அவ்வாளினைக் கொடுபோய்த் தம்பிக்குக் காட்டி, நிலைகூறித் தன் தமையனையழைத்து வந்து அரசமர்த்தக் கூறவும், அவனும் அவ்வாறே செய்தனன், என்ப.

அப்புலவர், குமணன் வாள் கொடுப்பக் கொண்டுவந்து இளங்குமணற்குக் காட்டிப் பாடிய பாடல் அடிகள், அவன் ஈகை இயலாப் பொழுதில் உயிர் விடுக்கத் துணிந்த நிகழ்வைக் கூறுதல் காண்க.

கேடில் நல்லிசை வயமான் தோன்றலைப் பாடி நின்றனன் ஆகக் கொன்னே பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தலென் நாடிழந் ததனினும் நனியின் னாதென வாள்தந் தனனே தலையெனக் கீயத் தன்னிற் சிறந்தது பிறிதொன்று இன்மையின் -புறம்:1658-13 3) இஃது, ஈகைச் சிறப்பின் எல்லையாக, அஃதியையாப் பொழுதில் சாதல் இனிதென முடித்துக் கூறியதால், முடிவில் நிலை பெற்றது,

TE. . • { - - . . . . .