பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/220

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

அ-2-20 புகழ் -24


218 அ-2-20 புகழ் 24

அ-2 இல்லறவியல் அ-2-20 புகழ் -24

அதிகார முன்னுரை

“புகழ்’ எனப்பெறுவது புகழப்பெறுதல்.

புகழப் பெறுதலாவது, ஒருவர் அறிவுத்திறனும் உரனும், மனநலனும் வளனும், செயலருமையும் பெருமையும், வாழ்வுத் தாகமும்

ஈகமும்தியாகமும் ஆகிய இவற்றை நினைந்து போற்றுதல்.

இவற்றுள் ஒன்றோ இரண்டோ அல்லது முக்கூறுகளுமோ ஒருவரிடத்து இயல்பின் அமைதலைப் பொறுத்தது, புகழ்ப் பெருமையும் என்க.

அவற்றுள், அறிவுத்திறனாவது, - செறிந்து நிற்கும் விளங்கிய அறிவான், பிற உலக வினைகள் நீங்கி, முனைந்து நின்று, முன்னறியாதன் உய்த்துணர்ந்து, பின்னறிவார்

உணர்வுகொள, உற்றதும் உறுவதும் உறப்போவதும் முற்றறியும் திறன், என்க.

- ‘அறிவுரனாவது, அவ்வறிவை அவ்வழி அறிய முயல்கையில்

உரத்துநிற்கும் வல்லுணர்வு’ என்க.

- மனநலனாவது, மாசறத் தோன்றி, மருளறத் துலங்கி, காசற விளங்கி, கரவற இலங்கிப் பேசலும் செயலும் பிறிது பிறிதின்றி உறுவதும்

உற்றதும் ஒன்றேயாமென ஆசற அகன்று நிற்கும் அழிவுறா உளநிலை என்க.