பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

219


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 219

மனவளனாவது, புறவுலகத் தாங்ககங்களால் அசைவுறாது கொழுவிய அன்பும், கெழுவிய கேண்மையும், தழுவிய சுற்றமும், சூழ இடந்தந்து, வழுவற விளங்கும் வான்போலும், செழுமையின் விளையும் வயல் போலும், ஆக்கம் கருதும் விழுமிய உணர்வுடைமை’ என்க.

- செயலருமையாவது, செயற்கரிய முயன்று செய்தல், என்க.

செயற்பெருமையாவது, செய்தவற்றால் அனைத்து மக்கட்கும் பெரிதும்

நன்மையுடைமை என்க.

- வாழ்வுத் தாகமாவது, தாம் வாழுங்காலம் முழுவதும் அறிவும், மனமும், உடலும் இவ்வுலக இயக்கத்து மேற்கொண்ட நோக்கத்தில் தவிப்புற நிற்றல்’ என்க.

வாழ்வு. ஈகமாவது அதற்கென மெய்வருத்தலும் உயிர் துறத்தலுமாம்

என்க.

- இனி, புகழ்’ என்பது தானிறந்த காலத்து உளதாம் உரை - என்பார் உரையாசிரியர் பதுமனார், தம் நாலடியார் உரையுள். (நாலடி:9:)

- புகழ் - புகல் (புகுதல் அல்லது புகலுதல் சொல்லுதல்) என்னும்

சொற்பொருளடியாகப் பிறந்த சிறப்புச் சொல்,

இச் சொல் விளக்கம் முன்னரே (5.39 கூறப் பெற்றுள்ளது) - புகழ்’ எனும் சொற்பொருளைக் குறிக்கும் சொற்கள் சிற்சிறிது வேறுபாட்டுடன் தமிழில் எட்டுச் சொற்கள் சொல் வழக்கிலும் நூல் வழக்கிலும் இருக்கின்றன. அவை: விளம்பரம், பெயர், சீர், சீர்த்தி, கீர்த்தி, இசை, புகழ், ஒளி ஆவன. - அவையும் அவற்றின் பொருள் வேறுபாடுகளும்: 1) விளம்பரம்: வழக்கு: விளம்பரம் பெறுதல், விளம்பரம் ஆதல்,

விளக்கம். இஃது, ஏதோ ஒருவகையில் தன் பொது ஈடுபாட்டையும், திறனையும் பொதுமக்களிடம் கவர்ச்சியாக விளம்பரப் படுத்துதல். விளம்பரம் பெறுவது புகழ் ஆகாது. இது தமக்குள்ள சிறு தகுதியைப் பேரளவாக மிகைப் படுத்தித் தம் வாய்ப்பு வசதிகளைக் கொண்டு, பொது மக்களிடம் தம் பெருமையைத் திணிப்பதாகும். கழகக் காலத்தில் இவ்வுத்தி அரசக் கட்டளைக்கும், கோயில் அறிவுப்புகளுக்கும் பயன்படுத்தப் பெற்றது. இக்காலத்தில் இதுபெரும் புகழ் உத்தியாகப் பயன்படுத்தப் பெறுகிறது. இதனால், தகுதியற்றவர்களும் பெரும் தகுதியும் திறமையும் உள்ளவர்களாகக் கருதப் பெறும் தவறு நேர்கிறது.