பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

அ-2-20 புகழ் -24


220 அ-2-20 புகழ் 24

எடுத்துக்காட்டுகள்: -

வேள்வியின் அழகியல் விளம்புவோர்’ - பரி:19:43 ‘விளம்புவர்’ - u:30:243

‘வியம்பினன்’ - சிலப் 11:193

‘இகல் என்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் தாவில் விளக்கம் தரும்’ - 853

(விளக்கம் புகழ்) 2) பெயர்: வழக்கு: பெயர் பெறுதல், பெயரெடுத்தல், பெயர் விளங்குதல். விளக்கம் இது, பெயரை மட்டும் மக்கள் அறிந்திருத்தல். ஏதோ ஒரு செயலையோ, கருத்தையோ, பெருமையையோ அடிப்படையாகக்

கொண்டு, அத்தகையவர்கள் தம் பெயரை மட்டுமோ அல்லது ஊரையுமோ அறியச் செய்தல்

(எ-டு) மாமல்லபுரம், ஊசி தொட்ட ஏரி, வினைதீர்த்தான் மடம்,

படியளந்தான் வாய்க்கால் முதலியன.

கழகக் காலத்தில் பெயர்பெற்ற நகர்கள், ஊர்கள், மலைகள், குடிகள்,

கொடையாளிகள், அரசர் இருந்தனர்.

போரில் வீரச்சாவு எய்தியவர்தம் பெயரும் சிறப்பும் எழுதிய நடுகற்கள்

வைக்கும் பழக்கமும் இருந்தது.

- திருக்குறளில் பெயர்ப் பெருமைக்கு எடுத்துக்காட்டுகள் இல்லை. கழக

நூல்களுள் உண்டு. அவற்றுள் சில:

அடுபோர்ச் செழியன் பெரும் பெயர்க் கூடல்’ - நற்:39:10 ‘பெரும்பெயர்த் தந்தை நீடுபுகழ் நெடுநகர்’ - நற்:162:7 ‘பொலிக நின் பெயரே’ - நற்:198:12 நின்பெயர் வாழியரோ - பதிற்:18:12 தம் பெயர் போகிய ஒன்னார் தேயம்’ - பதிற்:88:4 ‘பெற்ற பெரும்பெயர் பலர்கை இரீஇய . கொற்றத் திருவின் உரவோர் உம்பல்’ - பதிற்:90:23 பெயர்பெற்ற மால்வரை உடைத்து - Lifl:5:9 ‘பெரும்பெயர் முருக! - usi:5:50 இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே - Lift:15:35

‘பெரும் பெயர் மீளி’ - கலி:17:21