பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

அ-2-20 புகழ் -24


230 அ-2-20 புகழ் 24

என்பர் உரையாசிரியர் பதுமனார். (நாலடி:9) பரிமேலழகரோ, ‘ஒளி - தாம் உள காலத்து எல்லாராலும் நன்கு மதிக்கப் படுதல்'(குறள்:

653) என்றும், ‘ஒளி உறங்கா நிற்கவும் தாம் உலகம் காக்கின்ற அவர் (அரசர்) கடவுள்

தன்மை (குறள்:598). என்றும், இருவகையான விளக்கம் தருவார். - மேலும், அவர் ஞானம்(மெய்யுணர்வு (267 என்றும், புகழ்'(810, 970) என்றும் கூறி, வேறு இடங்களில் (921, 939) ஒன்றும் விளக்காமலும் விடுவா. - பதுமனாரும், பரிமேலழகரும் கூறிய முந்துரைக்கு,

‘மாற்றருந் துப்பின் மாற்றோர் பாசறை உளனென வெரூஉம் ஒர்ஒளி’ - புறம்: 209:56

- என்ற புறப்பாடலும்,

‘உறங்கு மாயினும் மன்னவன் தன்னொளி கறங்கு தெண்டிரை வையகம் காக்குமால்’ - சீவக. 248. - என்னும் ‘சீவக சிந்தாமணி பாடலும் அடிப்படையாதல் வேண்டும். அச்சிந்தாமணிப் பாடலுக்கும் அப் புறப்பாடலே கருத்து முதலாகவும் இருத்தல் வேண்டும். - இனி, ஒளி என்னும் சொல்லுக்கு நூலாசிரியரும், மெய்யுணர்வு(26) என்றும், புகழ்(870921939,979 என்றும் சிறந்த அறிவு 698

என்றுமே பொருள் கொள்வர். தலைமகன் தன்னொளி நூறாயி ரவர்க்கு நேர் பழமொழி:214:3.4

என்னும் பாடலடியினும் ஒளி புகழ்’ என்றே பொருள் பெறுகிறது. இவ் வெடுத்துக் காட்டுகளால் ஒளி என்னும் சொல், புகழ் என்று பொதுவாகவும், மெய்யுணர்வு கூர்ந்த சமயச் சான்றோர்தம் புகழ்’ என்று சிறப்பாகவும் பொருள் பெறுவதாகக் கொள்ளலே ஏற்புடையது என்று கருதலாம். . . இனி, புகழ் எனும் பொருள் தரும், விளம்பரம், பெயர், சீர், சீர்த்தி, கீர்த்தி, இசை, புகழ், ஒளி எனும் எட்டுச் சொற்களுக்கும், இவ்வுரையாசிரியன் எழுதிய எட்டு நூற்பாக்களும், அவற்றின் அளவீடுகளை நன்கு உணர்வதற்குரிய அளவைப் பொருள்களாகக் குடிநீர்க் கொள்ளளவு காட்டுகின்ற சங்கெடை, கெண்டி, குவளை, செம்பு, தவலை, குடம், அண்டா, கொப்பரை முதலிய அளவீட்டு