பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/234

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

அ-2-20 புகழ் -24


232 - அ-2-20 புகழ் 24

நசையுறு பண்ணொடு நவிலக் கூறுதல். குடத்தின் அளவெனக் கொள்ளலாம் இதனை. 7. புகழ்:

புகழ்’ எனப் பெறுவது பொன்றாக் கீர்த்தி. அகலமும் ஆழமும் அளப்பறக் கூறுதல். அண்டா அளவென அறையலாம் இதனை. 8. ஒளி:

ஒளியெனப் பெறுவது உலகுநலம் உயிர்த்தோன் வளியென மன்பதை வாழ்த்தி வணங்குதல். கொப்பரை அளவெனக் குறிக்கலாம் இதனை. - இவ்வரிசையுள் காணப்பெறும் புகழ்ப் பெயர்களும் அளவுகளும் ஒன்றினின்று ஒன்று சிறந்ததும் பெரிதுமாகும் என்க. இவை முரணின்றியும் தாறுமாறின்றியும் வழங்கப் பெறும் நோக்கத்தான் ஆய்வின் அடிப்படையில் அளவிடப் பெற்றன என்க. இது வேறெங்கும் எதனினும் கூறப் பெறாதது. இனி, உலக வரலாறுகளை ஊன்றி நோக்கின், உலகப் புகழ் பெற்றவர்களுள் பெரும்பாலார், மக்கள் நலத்துக்கு ஏதே ஒருவகையில் தொண்டு செய்தவர்களும், பெருங்கொடையாளர்களுமே மிகுபுகழ் பெற்ற பேராளர்களாக இருப்பதை உணரலாகும். இதனை,

‘உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று

ஈவார்மேல் நிற்கும் புகழ்’ - . - 232 பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் - - தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - 322

என்னும், நூலாசிரியர் கூற்றுகளானும்,

‘விந்தவர் என்பவர் வீந்தவ ரேனும்

ஈந்தவர் அல்லது இருந்தவர் யாரே’ - கம்ப.வேள்வி.30 என்னும் கம்பரது கூற்றானும் உணர்தலாகும். - எனவே, இவ்வதிகாரம், ஈகை அதிகாரத்தின் பின் வைக்கப் பெற்றது,

என்க. : ,. , , , -

- இனி, ஈகை என்பது ஈதல், கொடுத்தல் என்பது முன்னர்க் கூறப்பெற்றது. - ஈதல், கொடுத்தல் பொருளோ உணவோ, உடைகளோ மட்டுமன்று.

தம்மிடம் உள்ளதை முடிந்த அளவில் பிறர்க்கும் ஈந்து உதவுதல்.