பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

233


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 233 - அவ்வாறெனில், அவை கல்வி, உழைப்பு, செயலுதவி போன்று, எல்லார்க்கும் பயன்படும் பொருளாகவோ, செயல்களாகவோ கூட இருக்கலாம். - கல்வியிலார்க்குக் கல்விதரலும், தொழிலில்லார்க்குத் தொழில்தரலும், ஊக்கம் இழந்தாரை ஊக்கலும், ஆக்கம் இழந்தாரை ஆதரித்துப் போற்றலும், ஈகையறத்தின் பாற் பட்டவையே. - தம்மிடத்தது எது மிகுதியாக உள்ளதோ, அதனை அஃதில்லார்க்குத்

தந்துதவுதல் அனைத்தும் கொடையே! - அதில், பொதுமைப் பண்பு வளர்கிறது; வேறுபாடு தகர்கிறது; பொதுவுடைமை பூக்கிறது; புதுமை உலகமே உருவாகிற தன்றோ?

தம்மின் மிகவுடையார் தாமதனை மற்றவர்க்கும் வம்மின் எனக்கொடுத்து வாழ்தலன்றோ - நம்முயிர்க்கும் ஏற்ற அறக்கடமை இவ்வுலக மாந்தருக்கும் - போற்றும் பொதுமையறப் பூண் - உரையாசிரியன்.

உங்க. ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு. – 231 பொருள்கள் முறை இயல்பு

பொழிப்புரை இல்லாதவர்கக்கு உதவுதலும், அதனால் புகழ்பெற வாழ்தலும் தவிர, மாந்த உயிர்க்கு ஊதியம் என்பது வேறு இல்லை.

சில விளக்கக் குறிப்புகள் . . . . . . . . . . . - -

உலகின் எந்த ஒர் இயக்கத்திற்கும் ஒரு விளைவு இருத்தல் வேண்டும் என்பது பொருளியல் நூலார் கருத்து. மெய்யறிவியல் உண்மையும்

எனவே, உயிர் வாழ்தலிலும் ஒரு நோக்கம், பயன், விளைவு ஒன்று இருத்தல் வேண்டும். அதுதான் வாழ்வின் i_fit fosso, இருத்தல் முடியும். அஃது என்னவாக இருத்தல் முடியும் என்று சிந்தித்தால், அஃது உயிர்

மகிழ்வுறுதல் , ‘’ : , உயிர்மகிழ்ச்சி மன்ன் று நிகழ்வுஆகளை உள்ளடக்கியது. அவை, உள்ளத்தினது மகிழ்ச்சி, அறிவினது மகிழ்ச்சி, உயிர் வந்து இயங்குவதற்குக் காரணமான உடலினது மகிழ்ச்சி மகிழ்ச்சி என்பது கூர்தல், அஃதாவது