பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

அ-2-20 புகழ் -24


234 அ-2-20 புகழ் 24

உணர்வு கூர்தல், கூர்தல், உச்ச நிலை பெறுதல்.

உள்ளம் மேம்பட்டு நிற்கையில் அது மகிழ்வடைகிறது; அதே போல் அறிவு மேம்பட்டுக் கூர்தல் அடைந்து நிற்கையில், அதுவும் மகிழ்ச்சியுறுகிறது; உடலும் மேலான உணர்வில் திளைக்கையில் அதுவும் மகிழ்வடைகிறது.

இம்மூன்று உணர்வுகளையும் உடற் புலன்கள் வழியாகவே அவை பெறுகின்றன. அவை மூன்றும் ஒரேநிலையில் உணர்வுகூர்ந்து நிற்கையில் ஏற்படும் மகிழ்வே, உயிர்க்குக் கிடைக்கும் அனைத்தினும் மேலான மகிழ்வாகும்.

இம்மூன்று உணர்வு நிலைகளையும் உயிர் நுகர்ச்சி பெற்று, அதனால் மகிழ்வுற்று அதுவும் கூர்தல் உறுகிறது. உயிர் கூர்தல் உறுவது என்பது மேம்பட்டு விளங்குவது. உயிர் மேம்பாடு என்பது உயிர் ஒளி பெறுதலாகும். உயிர் ஒளி பெறப்பெற அஃது இயற்கையோடு இயைபுற்று மிகுந்த ஆற்றலைப் பெறுகிறது. அக்கால், அஃது அறியப் பெறும், உணரப்பெறும் பரப்பு விரிவடைகிறது. அப்பரப்பு விரிவடையும் பொழுது, அதன் நுகர்ச்சிப் பரப்பும், பயன்பரப்பும் விரிவடைந்து கொண்டே போகிறது.

இந்நிகழ்வுகளெல்லாம் உயிர் தனித்து நின்று இயங்குவதால் ஏற்படுவதில்லை. ஓர் உயிர் தனக்குகந்த இன்னோர் உயிருடன் இணைந்து, கலந்து இயங்கும் பொழுதே, அது நுகர்ச்சி பெறவும், அதன் வழிதான் மகிழ்ச்சியுறவும் அதன்வழித் தன்னை மேம்படுத்திக் கொள்ளவும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. நேர்ச்சிகள் உண்டாகின்றன.

- எனவேதான் உயிர்கள் தனித்து வாழவிரும்புவதில்லை. கூடிவாழவும், மற்ற உயிர்களோடு அன்புத் தொடர்பு கொள்ளவும், ஒன்றுக்கொன்று கொடுத்தும் கொண்டும், இன்பங்களிலும், துன்பங்களிலும் பங்குகொள்ளவும், அவற்றைப் பகிர்ந்து கொள்ளவும், அவ்வகையால் தானும் பிறரும் நிறைவு பெறவும் விரும்புகின்றன.

- தனக்கு வேண்டிய ஒன்றை, மற்றவரிடமிருந்து பெறும்போது எவ்வளவு மகிழ்வடைகின்றோமோ, அந்த அளவில் பிறர் விரும்பும் ஒன்றைத் தான் பிறர்க்குக் கொடுப்பதிலும் மகிழ்வடைகின்றோம்.

இன்னும் சொன்னால், பெறுவதில் ஒரு தாழ்வு உணர்வைப் பெறும் நாம், கொடுப்பதில் ஒரு தலைநிமிர்வு பெறுகிறோம். இதனால் பெறுவதைவிடக் கொடுப்பதில்தான் நாம் இரட்டை மகிழ்வு கொள்கிறோம். இதில் உள்ள மகிழ்வு தன்னால் பிறர் நிறைவும் மகிழ்வும் பெறுகிறார்களே என்பதுதான். . .