திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்
235
திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 235
- இதனால்தான் ஈகை இன்பம்(228) என்கிறார், நூலாசிரியர். வோனின்
கை மேலோங்கி இருப்பதைப்போலவே மனமும் மேலோங்கி இருப்பதையும், வாங்குவோனின் கை தாழ்ந்திருப்பதைப் போலவே மனமும் தாழ்ந்து போவதையும் நாம் உணர்தல் வேண்டும்.
- பிறர்க்கு ஒன்றைக் கொடுப்பதால் நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது;
2)
வாங்குவதால் இகழ்ச்சி ஏற்படுகிறது. அதுபோலவே, கொடுப்பவனுக்குப் புகழ் உண்டாகிறது; வாங்குபவனுக்கு இகழ் உண்டாகிறது. அதனால்தான் ஏற்பது இகழ்ச்சி(ஆசூ:8) என்றனர்.
இந்தக் குறளில், ஆசிரியர் ஒர் உலகியல் உண்மையையும், ஒரு மெய்ப்பொருள் உண்மையையும் ஒருங்கே சுட்டுகிறார்.
- உலகியல் உண்மையாவது, உலகில் வறியவர்க்கு ஈவதும், அதனால்
மாந்தன் புகழ்பெற வாழ்வதும்தாம் வாழ்வியல் நோக்கமும், பயனும் ஆகும் என்பது.
- மெய்ப்பொருள் உண்மையாவது, உயிர் என்பது வாணிகன் ஒருவனைப்
3)
போன்றது. அவ்வாணிகன் வாழ்க்கை என்னும் வாணிகத்தைச் செய்ய விரும்பி, இவ்வுலகத்திற்கு வருகிறான். அவ்வாணிகத்திற்கு முதல்(Capital) வேண்டுமன்றோ? அவன், இந்த ஐம்பூதப் பொருளாகிய ‘உலகம்’ என்னும் செல்வனிடம் இந்த உடல் என்னும் முதலைக் கடனாகப் பெறுகிறான். அதை வைத்துக் கொண்டு வாழ்க்கை என்னும் வாணிகத்தைச் செய்கிறான். அவன் செய்யும் வாழ்க்கை வாணிகத்தில் வரவுக்கும் செலவுக்கும் சரியாகப் போய் விடுகிறது. ஆனால், அவன் சில நேரங்களில் இல்லாத வறியவர்க்கும், தேவையான பிறர்க்கும் தன் உடைமைகளிலிருந்து அன்புடன் ஈகை செய்தானே அஃதாவது, கொடுத்து உதவினானே அதனால் கிடைத்த புகழ் மட்டுமே அவனுக்கு ஊதியமாக இலாபம், (Profit) ஆக வருகிறது. இறுதியில், அந்த உயிர் என்னும் வாணிகன், உடல் என்னும் முதலைத் தான் கடனாகப் பெற்ற இவ்வுலகச் செல்வனிடம் திருப்பிச் செலுத்திவிட்டுத் தனக்கு ஈகையால் கிடைத்த புகழை மட்டும் ஊதியமாக எடுத்துக் கொண்டு, போய் விடுகிறான் - என்பது. இந்த மெய்ப்பொருள் உண்மை இக்குறளின்கண் உள்ள ‘ஊதியம்இலாபம் என்னும் சொல்லால் நமக்குத் தெரிய வருகிறது என்க. ஊதுதல் (பெருகுதல்) ஊதியம். அஃதாவது முதலுக்கு மேல் பெருகுவது:
ஈதல், இசைபட வாழ்தல் அது வல்லது : இல்லாதவர்க்கு உதவுதலும் அதனால் புகழ்பெற வாழ்தலும் தவிர. ,