உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

அ-2-20 புகழ் -24


236 அ-2-20 புகழ் 24

ஈதல் ஈகை செய்தல்; உதவுதல். வறியார்க்கொன் lவதே ஈகை (22) என்றார் ஆகலான், இல்லாதவர்க்கு என்பது வருவிக்கப் பெற்றது.

இசைபெற வாழ்தல்: புகழ்பெற வாழ்தல். அதுவல்லது. அது தவிர. பிற வேறு செயல்களாலும் இசையென்னும் புகழ் கிடைத்தாலும், ஈகையால் கிடைக்கும் புகழே சிறப்பென்றார் என்க.

‘ஈத்துண்பான் என்பான் இசை நடுவான்’ - நான்மணி:59:1 “வாணன் வைத்த விழுநிதி பெறினும் பழிநமக் கெழுக வென்னாய் விழுநிதி ஈதல் உள்ளமொடு இசைவேட் குவையே -மதுரைக்:203:205 ‘மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் . . . . சாவா உடம்பெய்தி னார்’ - திரி:16

‘கடிப்பிரு கண்முரசம் காத்ததோர் கேட்பர்; இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்; அடுக்கிய மூவுலகும் கேட்குமே சான்றோர் கொடுத்தார் எனப்படும் சொல் நாலடி:100 ‘மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறிஇத் தாமாய்ந் தனரே துன்னருஞ் சிறப்பின் உயர்ந்த செல்வர். இன்மையின் இரப்போர்க்கு ஈஇ யாமையின் . . - தொன்மை மாக்களின் தொடர்புஅறி யலரே! - புறம்:165; 1-5 ‘ஈயா மன்னர் நான !, . . . . . . . .

வியாது பரந்தநின் வசையில்வான் புகழே - புறம்:168:21-22 செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்போம் எனினே தப்பு பலவே - புறம்:189:7-8

ஒருதா மாகிய பெருமை யோரும் தம்புகழ் நிறீஇச் சென்றுமாய்த் தனரே

- என்றார், பிறரும். - - இத்தொடரில் வரும் ஈதல் வாழ்தல் என்னும் இருசொற்களையும் வியங்கோள் வினைமுற்றுகளாகக் கொள்வதிலும், தொழிற்பெயர்களாகக் கொள்வதே பொருத்தமென்க. -

- .266:4-5