பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

237


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 237 4) ஊதிய மில்லை உயிர்க்கு : மாந்த உயிர்க்கு ஊதியம் என்பது வேறில்லை. - ஊதியம்: கூடுதல், இலாபம்). - முதலுக்கு மேல் கூடுவது. உயிர்க்கு மாந்த உயிர்க்கு. அது முழுமை பெற்றதால் என்க.

5) இது, புகழ்க்கு அடிப்படைச் சிறப்பே ஈதல் என்று அதிகாரத்துக்குக்

கட்டியங் கூறுதலால் முதற்குறளாக இடம் பெற்றதென்க. -

உங்.உ. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று

ஈவார்மேல் நிற்கும் புகழ். - 232

பொருள்கோள் முறை இயல்பு

பொழிப்புரை இவ்வுலகத்துப் பேச்சாலும், எழுத்தாலும், பிற இயல், இசை, நாடகக் கலை, இலக்கியங்களாலும், பொதுமக்களும் புலமக்களும் உரைக்கின்ற உரைகள் எல்லாவற்றுள்ளும் கருப்பொருளாக இருப்பது, இல்லாதவர்க்கு இருந்தவர்கள் கொடுத்துதவிய புகழ்ச்சி நிலையே ஆகும்.

சில விளக்கக் குறிப்புகள்: -

உரைப்பார் உரைப்பவை எல்லாம் : இவ்வுலகத்துப் பேச்சாலும், எழுத்தாலும், பிற இயல், இசை, நாடகக் கலை, இலக்கியங்களாலும், பொதுமக்களும், புலமக்களும் உரைக்கின்ற உரைகள் எல்லாவற்றுள்ளும் கருப்பொருளாக இருப்பது. எல்லாம் என்னும் சொல்லால், அவ்வுரைக்கெல்லாம் தருதப்படும் பொருளாக கருப்பொருளாக இருப்பது என்பது விளங்கிக் கொள்ளப் பெற்றது. - தனக்கு ஒன்று உதவியவரைப் பற்றி உதவி பெற்றவரும், அவர்குடும்பத்தாரும், அவர் வழியினரும் தொடர்ந்து புகழ்ந்து பேசுவது, உலகியல்பு. - - - - -

‘எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண். விழுமம் துடைத்தவர் நட்பு’ * . . . . . . . . - 107

என்றார், ஆசிரியரும்.” **