பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

அ-2-20 புகழ் -24


238 அ-2-20 புகழ் 24

- அவ்வாறே தாளாண்மை மிக்க ஒருவரையும் உலகத்தவர் தொடர்ந்து

பல வகையானும் புகழ்ந்து கொண்டிருப்பதும் உலக இயல்பே.

‘ஞாலம் நின்வழி ஒழுக, பாடல்சான்று

நாடுடன் விளங்கும் நாடா நல்லிசை’ - பதிற்:14:9-10 ‘வரைபுரை களிற்றொடு நன்கலம் ஈயும்

உரைசால் வண்புகழ்ப் பாரி’ -அகம்:303:9-10 “இரவலர் மெலியாது ஏறும் பொறையன் உரைசால் உயர்வரைக் கொல்லி’ - நற்:185:6-7 ‘கெழிஇக் கேளிர்சுற்ற, நின்னை

எழிஇப் பாடும் பாட்டமர்ந் தோயே! - பரி:14:23-24

‘வீற்றிருந் தோரை எண்ணுங் காலை உரையும் பாட்டும் உடையோர் சிலரே மரையிலை போல மாய்ந்திசினோர் பலரே - புறம்:27:5-7 “புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற’ - புறம்:57:2-3 “வள்ளியை யாதலின் . . . . . . . .

நுணங்கு செந்நா வணங்க ஏத்திப் பாடப் பாடப் பாடுபுகழ் கொண்டநின்

ஆடுகொள் வியன்மார்பு’ - புறம்:112:8,13-16 ‘உரைசால் சிறப்பின் உரவோர் மருக

தண்புனல் படப்பை எம்மூர் ஆங்கண்

உண்டும் தின்றும் ஊர்ந்தும் பாடுகம்’ - புறம்:166:9,29-30 அரைசுபடக் கடக்கும் உரைசால் தோன்றல்நின் உள்ளிவந்த ஒங்குநிலைப் பரிசில்’ - புறம்:211:6-7

புரவலர் புன்கண் நோக்காது இரவலர்க்கு

அருகாது ஈயும் வண்மை

உரைசால் நெடுந்தகை ஒம்பும் ஊரே’ - புறம்:229:7-9 ‘யாமும் பிறரும் வாழ்த்த நாளும்

நிரைசால் நன்கலம் நல்கி உரைசெலச் சிறக்க அவன் பாடல்சால் வளனே’ - புறம்:296:29-31 வேந்தரும் விழுக்கூழ் பரிசிலர்க் கென்றும்