பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

அ-2-20 புகழ் -24


240 அ-2-20 புகழ் 24

பொழிப்புரை எதுவும் பொருந்தி நிலையாக நில்லாத இவ்வுலகத்தில் அழியாது நிற்பது, உயர்ந்த புகழ் அல்லாது வேறொன்றும் இல்லை.

சில விளக்கக் குறிப்புகள்:

1 ஒன்றா உலகத்து எதுவும் பொருந்தி நிலையாக நில்லாத இவ்வுலகத்தில். - இவ்வுலகத்தில் எந்தப் பொருளும் பொருந்தி நிலையாக நில்லாதது

என்பதால் ஒன்றா உலகம் என்றார். - இதில், பொருள்கள் மட்டன்றி உலகமும் நிலையாதது என்று

சுட்டப்பெற்றது.

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மை கடை’ - 331 அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல்’ - 333

- என்பார், ஆகலின்.

- நிலைபெறும் புகழைச் சுட்ட வந்தவர் உலகின் உலகப் பொருள்களின்

நிலைமையைச் சுட்டினார், என்க.

இக்குறளில் வரும் ஒன்றா என்னும் சொல்லை, உலகத்தின்மேல் ஏற்றிச் சொல்லாமல், புகழின்மேல் ஏற்றி, இணையில்லாத ஓங்கிய புகழ்’

என்று பொருள் தருவர் மணக்குடவர், பரிமேலழகர், பாவாணர் முதலிய உரையாசிரியர்; அது பொருந்தாது.

- ஒன்றா என்பதற்குப் பொருந்தாத, நிலையில்லாத என்பதும், அஃது உலகத்தின்மேல் ஏற்றிச் சொல்லப் படுவதுமே பொருந்தும் என்க. பரிதியாரும், காலிங்கரும் அவ்வாறே பொருள்கொண்டனர்.

2) பொன்றாது நிற்பது : அழியாது நிலைத்திருப்பது.

பொன்றுதல் அழிதல்

- பொன்றாது அழியாது. (36, 88) - எதுவும் நிலையாக நில்லாத உலகத்தில் அழியாமல் நிலையாக நிற்பது. 3) உயர்ந்த புகழ் அல்லால் ஒன்றுஇல் : உயர்ந்த புகழ் அல்லாது வேறொன்றும்

உயர்ந்த புகழ் என்றது ஈகையால் வந்தது.

- ஒன்று இல்: வேறொன்றும் இல்லை.