பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

243


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 243

ஈவோர் அரியஇவ் வுலகத்து வாழ்வோர் வாழஅவன் தாள்வா ழியவே - புறம்:171:1-4,14-15.

4) சென்ற குறளில் கூறிய ஈவார் மேல் நிற்கும் புகழ்ச் சிறப்புக் கூறியவர், இதில் நிலையா உலகத்துப் பொன்றாது நிற்பது புகழ் ஒன்றே என , மேலும் சிறப்புக் கூறியதால், அதன் பின் இது வைக்கப் பெற்றது.

உங்ச. நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு. - 234

பொருள்கோள் முறை:

நிலவரை நீள்புகழ் ஆற்றில் புலவரைப் புத்தேள் உலகு போற்றாது.

பொழிப்புரை. இவ்வுலக எல்லையின் அளவு நீண்ட புகழைச் செய்யாத அறிஞர்களைத் தேவர் உலகம் என்று சொல்லப் பெறுவதும் போற்றிக் கொள்ளாது.

சில விளக்கக் குறிப்புகள்:

இந்தக் குறளிலும் மணக்குடவர், பரிமேலழகர், பாவாணர் முதலிய உரையாசிரியர்கள் கருத்து வேறுபடுவர். நிலவரை நீள் புகழ் ஆற்றின் என்பதற்கு, ஒருவன் நில எல்லைக் கண்ணே பொன்றாது நிற்கும் புகழைச் செய்யுமாயின் என்று பொருள் தருவர். அவ்வாறு தந்து, நீள் புகழை ஈகையால் வரும் புகழ் என்று பொருள் கொண்டு, அப்புகழ் கொண்டவனை யல்லாது, புத்தேள் உலகம் ஞானிகளையும் பேணாது என்று முடிவு கொள்ளுவர். இது சரியான பொருளன்று. இவ்விடர்ப் பாட்டிற்குக் காரணம், நீள்புகழ் என்பதற்கு ஈகையால் வரும் புகழ் என்று பொருள் கொண்டதும், ஆற்றின் என்பதற்குச் செய்யுமாயின் என்றுபொருள் கொண்டதுமே என்க. இவ்விரண்டு பொருள்களுக்குமே செய்யுளில் இடமில்லை.

நீள்புகழ் என்பதை, ஈகையால் வரும் நீண்ட புகழ்’ என்று மட்டுமே பொருள் கொள்ளத் தேவையில்லை. பொதுவாகவே நீண்ட புகழ் என்பதே சாலும். ஏனெனில், ஈகையால் மட்டுமே புகழ் வருவதில்லை. பிற கல்வி, தொண்டு, அரசியல், வீரம் முதலியவற்றாலும் வருகின்ற புகழ்ப்பெருமையும் ஈண்டு உண்டு நூலாசிரியர் இவ்வாறான புகழையும் உள்ளடக்கியே கூறினாராதல் வேண்டும். - > > *