பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/249

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

247


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 247 இவ்வாறான அருஞ்செயல் செய் முயல்வோருள் பலர் அச் செயலருமை கருதி, இடையிலேயே நெகிழ்ச்சி கொள்ளுதல் உலகியல்பாக உள்ளது. ஆனால் அவ்வாறு இறுதிவரை தம் நோக்கத்துள் உறுதியுடையவராயிருத்தல் அருமையிலும் அருமையாம். இதனை ஆசிரியர் பலவாறு உணர்த்துவார்.

‘கடைகொட்கச் செய்தக்க தாண்மை இடைகொட்கின் எற்றா விழுமம் தரும்’ - 663 ‘கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கம் கடிந்து செயல்’ – 668 துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை - 669 ‘எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் - வேண்டாரை வேண்டாது உலகு” - 670 என்னும் குறட்பாக்களுள் செயலருமையும், அதனின் மேற்சென்று செய்தலும் உணர்த்தப் பெற்றது. இவ்வகையில் பொதுத்தொண்டு செய்வார்க்கு இடுக்கண்களும், உடல் நலம் கெடுதலும்கூட உய்த்து உணர்த்தப் பெறுகின்றன.

அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை’ - -1027 ‘இடும்பைக்கே கொள்கலன் கொல்லோ குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு’ - 1029

என்பன அவை, - இதில் கூறப்பெறும் முதற்கருத்து இதையொட்டியதுதான். புகழ்தரும் அருஞ்செயலைச் செய்ய முனைபவர்க்குப் பலவகையான கேடுகள் - கெடுதிகள் - துன்பங்கள் வரும். அவர்க்கு அவற்றைத் தாங்கும் மனவன்மையும் உறுதியும் வேண்டும்.

இத்தகைய கேடுகள், அவர் புகழ் வளர வளர வருபவை, என்பார், ஆசிரியர்.

2) நத்தம் போல் கேடும் : புகழ் ஆக்கம் அல்லது வளர்தல் போலவே உருவாகி வளர்ந்து வரும் பல்வகைக் கேடுகளும், -

நத்தம் ஆக்கம்; வளர்ச்சி.

நந்துதல் - ஆகுதல், வளர்தல்.