பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

அ-2-20 புகழ் -24


248 அ-2-20 புகழ் 24

நந்தல் என்பது வலிந்து, மகரவீறு பெற்றது. நத்தம்போல் ஆக்கம்போல். புகழ் என்னும் அதிகாரக் கருத்தைத் தழுவி, புகழ்ஆக்கம் அல்லது

வளர்ச்சி போலவே என்று பொருள் பட்டது. - ஒரு செயலால் ஒருவர்க்குப் புகழ் வளர வளர, அவர்க்குத் துன்பங்களும்

அடுத்தடுத்து ஆகி வரும் என்றார். ஒருவர் ஓர் அரிய செயலைச் செய்யத் தொடங்குகையில் துணையாக நின்ற பலர், அச்செயலால் அவர்க்குப் புகழ் வரவர, இவர்கள் அவர் மேல் பெறாமை கொண்டு அவரை விட்டு விலகிப் போவது மட்டுமின்றி, அவர்க்கு எதிராகவும் நின்று தொல்லை தருவர்.

- இவர் அக்கால் தனித்து நின்று இயங்குதலாலும், அவர்கள் மறைமுகமாகக் கொடுக்கும் இடையூறுகளாலும் பெரிதும் துன்பப்பட வேண்டியிருக்கும். அவர்கள் பொறாமையால் விலகுவது ஒருபுறமிருக்க இன்னுஞ் சிலர் இவர் தொடங்கிய அருஞ்செயலின் சுமைதாங்காமலும், இடையில் இவரைத் தனியே விட்டு விட்டு விலகுவர். இதனால் செயலைத் தொடங்கியவர் தனித்து இயங்கவேண்டி வரும். இது பற்றிய ஆசிரியர் கருத்து ஒன்றை மேலே கண்டோம்.

அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை’ -702 - அஃதாவது, போர்க்களத்துக்குப் போய் போர் முனையில் நின்று பொருதும் வீரனுக்கு, உயிரையிழக்கும் அளவுக்கு எத்துணைத் துன்பம் இருக்குமோ, அத்துணைச் சுமையிருக்கும் தனித்து நின்று புகழ்தரும் ஒருசெயலில் இறங்கினார்க்கு - என்பார். அத்துடன், துணை நின்றவர் பணிச்சுமை கண்டு, இவரைத் தனியே விட்டுவிட்டு இடையில் போய்விடுவர். அத்தகையாரைத் துணையாகக் கொள்வதைவிடத் தனித்து இயங்குவது மேல் என்பார். இதில் இடையில் விட்டு விலகுவாரைப் பயிற்சியில்லாத குதிரை என்பார் ஆசிரியர். .

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமை அன்னார் தமரின் தனிமை தலை’ . - – 814 (அமரகம் போர்க்களம் ஆற்றறுத்தல் வழியில் வீழ்த்தி விட்டுத் திரும்பிவிடுதல்; கல்லாமா பறிற்சியில்லாத குதிரை. தமர் - துணையாளர். தனிமை தலை தனித்தே போராடுவது சிறந்தது)