பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

249


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 249

. இவ்வாறு, துணையிழப்பு, தனிமை, பொருள் முட்டுப்பாடு, வறுமை, குடும்பச்சுமை, எதிரிகள் துன்பம், இழிவு, எள்ளல், தூற்றுதல் முதலியவை தாங்கல் ஆகிய இவையெல்லாம், புகழ்க்குக் காரணமான ஒர் அருஞ்செயலைச் செய்கையில் இடையில் வரக்கூடிய கேடுகள் என்க.

- புகழ் ஆக்கம் பெறப்பெற இக்கேடுகளும் மேலும் மேலும் மிகுந்தும்,

அழுத்தமாகவும் வரும் என்றார், என்க.

3) உளதாகும் சாக்காடும் : அப்புகழ் முதிர்வடைந்து நிலைபெறுவது

போலவே, உடல்முதுமையுற வருவதாகும் இறப்பும்.

உளதாவது : புகழ்நிலை பெறுவது. சாக்காடு : இறப்பு.

- புகழ் வளர்ந்து முதிர்வடைய முதிர்வடைய, உடலும் முதுமையுற்று வரும் அது நிலைபெறும்பொழுது, உடலும் இயக்கமின்றி நிலைபெற்று விடும். அஃதாவது இறப்பைத் தழுவும்.

- இஃது, ஏதோ கற்பனையாகச் சொல்லப்படுவதுபோல் தோன்றினும், இஃது உலகியல் உண்மையாகவும், மெய்யறிவியல் உண்மையாகவும் இருக்கின்றதை அறிவினார் உணர்ந்து தெளிதல் வேண்டும்.

- உலகியலில் இதுவரை மிகுபுகழ் பெற்றவர்தம் வரலாறாகவே இஃது

இருக்கிறது. எண்ணிப் பார்க்க

- பாவாணர் இங்கு ஓர் அழகியல் வடிவத்தைக் காட்டுவார். அஃது இது:

பொதுவாக, ஒருவன் வாழ்க்கைப் பொறுப்பேற்ற பின்பே, புகழுக் கேற்ற ஈகை வினைகளையும் தொண்டுகளையும் செய்யமுடியும். அதற்குள் அவன் உடம்பு முழுவளர்ச்சி யடைந்திருக்கும். புகழ்த் தொண்டில் ஈடுபட்டுக் காலம் செல்லச் செல்ல, மூப்பினால் உடம்பு தளர்ந்து வருகின்றது. இறுதியில் சாக்காடு நேர்கின்றது. அதுவரை பொது நலத்தொண்டைத் தொடர்ந்து செய்து வந்ததினால், புகழும் படிப்படியாக வளர்ந்து, அவன் சாக்காட்டு பூதவுடம்பு மறைந்தபின் தானே விளங்கித் தோன்றுகிறது.’

4 வித்தகர்க் கல்லால் அரிது : மிகச் சிறந்த அறிவுத்திறப்பாடு உடையவர்க்

கல்லால், தாங்கிக் கொள்ளுதல் அரிதாகும்.

வித்தகர்க்கு மிகச் சிறந்த அறிவுத் திறப்பாடு உடையவர்க்கு, வித்தகர் - வடசொல் வடிவம்.

- பாவாணர் இதைத் தமிழ்த்திரிசொல் என்பார். அதற்கு விழி என்னும் சொல்லை மூலமாகக் காட்டுவார். அவர் காட்டும் விளக்கம் இது:

"