பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/253

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

251


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 251

சாரூபம் (சிலப்) சாதனம் (மணி) சாதித்தல் (மணி) சாந்தி : (பதிற்; சிலப், மணி) சாமானியம் (மணி) சிங்கம் (சிலப்; மணி) - முதலியன. விரிவாக நூல்களுள் கண்டுகொள்க.

. இத்தொடர்க்கு உரையாசிரியர் இத்தகு நிலை அறிஞர்க்கு அல்லாமல் பிறர்க்கு வாய்த்தல் இல்லை என்று பொருள் படுமாறே பொருள் கூறியுள்ளனர்.

பரிமேலழகர், சதுரப்பாடு உடையார்க்கல்லது இல்லை என்றவாறு என்றும்,

. மணக்குடவர், வல்லவற்கல்லது அரிது, மக்களெல்லார்க்கும் அரிது

என்றும், பாவாணர் திறப்பாடுடையவர்க்கன்றி ஆகாவாம்’ என்றும் பொருள்தருவர்.

இவற்றின் வழி, வித்தகர்க்கல்லால் அமையாது’ என்றே பொருள்

கொள்வது போலாகும்.

- இஃது, அத்துணைச் சரியன்று. இந்நிலை பிறர்க்கு வாயாது, அமையாது - என்பது, இஃது ஏதோ ஒரு நல்வாய்ப்புப் போல் பொருள் கொள். ஏதுவாகிறது.

அஃது அற்றன்று, அந்நிலைகள் அறிவுத்திறன் உள்ளவர்கள் அல்லாமல் பிறர் தாங்கற்கரிது’ என்பதே சரியான பொருளாகும் என்று அறிக.

- மேலும், நத்தம் என்பதற்குப் பரிதியாரும், காலிங்கரும், இக்கால உரையாசிரியர் சிலரும் சங்கு என்று பொருள் கொண்டு, அதுபோல் வித்தகர் துன்புறினும் மேலும் தாம் பெருமை குன்றார் என்றும், ‘சங்கைச் சுடச்சுட வெண்மை பளிச்சிடல் போல் புகழ் வளர வரும் வறுமை என்றும் பொருள் காண்பர்.

- புகழ் ஆகி வருவதுபோல் கேடு வரும் என்றற்கு சங்கு வெண்மையுறுவது போல், என்பது, சுற்றிவளைத்துப் பொருள் கொள்வதாகும். மேலும் நத்தம் என்பதற்குச் சங்கு என்று பொருள் கொண்டு விட்டால், ஆக்கம், வளர்ச்சி என்பதற்கு சொல் விளக்கம் இல்லாது போதலும் உணர்தல் வேண்டும். . . . .