பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

253


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 253

கோட்பாட்டை உள்ளடக்கியது. அது நம் விருப்பப்படி அமைவதன்று. எனவே அவ்வாறு பொருள் கொள்வது, இயற்கையியலுக்கும், அறிவியலுக்கும் மாறுபட்டது. பொருந்தாதது. எனவே, பரிமேலழகர், மக்களாய்ப் பிறக்கின் புகழுக்கு ஏதுவாய குணத்தொடு பிறக்க என்றது, தவறு. வேத மதக் கொள்கைக்கும் அது பொருந்தாது. தெய்வங்கள் மாந்தராய்ப் பிறப்பெடுக்கும் திருவிறக்க (அவதார)க் கதைகளிலேயே அவ்வாறு நடப்பதாக ஆரியமதக் கற்பனைக் கூற்றும்கூட அதற்குப் பொருந்திவராது.

3 அஃதிலார் தோன்றலில் தோன்றாமை நன்று அவ்வாறு இல்லாதவர்கள் தம்மை அவர்கள் இகழ்கின்ற வகையில் அறிமுகம் ஆவதைவிட, அவ்வாறு தோன்றாமல் இருப்பதே நல்லது.

- உலகமக்கள் தம்மைப் புகழ்கின்ற வகையில் விளங்கித் தோன்ற இயலாதவர்கள், அவர்கள் இகழ்கின்ற வகையில் அறிமுகம் ஆகக் கூடாது. அவ்வாறு தோன்றுவதைவிட, அவர்கள் தோன்றாமல் இருப்பதே நல்லது என்றார், என்க.

- இந்திய வரலாற்றில், காந்தியடிகள் புகழ் பெற்றவர். அவரை, அவர் இந்து முசுலீம் கொள்கையைப் பிடிக்காத கோட்சே என்னும் கொடியவன் ஒருவன் சுட்டுக் கொன்றான்.

- கோட்சே மக்களுக்குத் தெரியாதவனாக இருந்து, காந்தியடிகளைக் கொன்றதால், உலக மக்கள் அனைவர்க்கும் தெரிந்தவனாக ஆகிவிட்டான்.

மக்களிடம் விளங்கித் தோன்றின் காந்தியடிகளைப் போல் தோன்றுக அவ்வாறில்லாதவர்கள் கோட்சே போல் மக்கள் இகழ்கின்ற வகையில் தோன்றுவதைவிட, தோன்றாமல் இருப்பது நல்லது - என்னும் வகையில் பொருள்படுவது, இக் குறள் கருத்து. மற்று, தோன்றுக என்பதற்கும், தோன்றாமை என்பதற்கும் பிறப்பை இணைத்துப் பொருள்கூறல் தவறு.

- பாவாணரும், இத்தொடர்களுக்குப் பொருள் கூறுகையில்,

ஒருவர் இவ்வுலகத்தில் பிறக்கின் புகழ்க்கு ஏதுவான குணத்தொடு பிறக்க அக்குணமில்லாதார் பிறத்தலை விடப் பிறவாதிருத்தலே நல்லது என்று கூறிவிட்டு, விளக்கத்தில், . ...: ‘ ‘

பிறத்தலும் பிறவாமையும் இறைவன் ஏற்பாட்டின் படி அல்லது ஊழின் அமைப்புப் படியே நிகழ்வதால், அவை பிறப்பவரின் உணர்ச்சியொடு கூடியனவும் விருப்பிற்கு அடங்கியனவுமல்ல.

கேற்ற நல்வினை செய்வானைப் பாராட்டியதும், அது செய்யாதானைப்