பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

255


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 255

. ஆனால், பிறர்தாம் தம் நிலை அல்லது தகுதி கண்டு தம்மைப் பாராட்டவில்லை என்று இவர் நினைத்துக் கொள்வது பொருந்தாது என இத்தகையவர்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். - தகுதி இருப்பினும், செயலின்றிப் புகழில்லை என்பது உணர்த்தினார்,

என்க.

2) தம்மை இகழ்வாரை ந்ோவது எவன்? பிறர், தம்மை இகழ்வதற்காக

அவர்களை நொந்து கொள்வது, எதனால்?

- பிறர்தம்மை இகழ்வது, பிறர்க்கு நன்மை செய்யத் தம்மால் இயல்வதாக

இருந்தும், ஒன்றும் செய்யாமல் இருப்பதால் என்க. என்னை?

‘செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க

செய்யாமை யானும் கெடும்’ - 466 ‘ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்

தோற்றம் நிலக்கும் பொறை” - 1003 நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புபா ராட்டும் உலகு’ - 994 ‘பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்

அருமை உடைய செயல்’ ... 973

- என்றார், ஆகலின்.

‘உண்ணான் ஒளிநிறான் ஒங்கு புகழ்செய்யான் துன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே வழங்கான் பொருள்காத் திருப்பானேல் அஆ . இழந்தான்என்று எள்ளப் படும்’ - - நாலடி:9 - என்றார் பிறரும். 3) முன்குறளில், புகழொடு தோன்றுக என்றவர், இதில் புகழ்பட வாழாதார்

குறைகூட்டியதால், அதன்பின்னர் இது வைக்கப் பெற்றது.

உங்அ. வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின். . - 238

பொருள்கோள் முறை: - * -

இசைஎன்னும் எச்சம் பெறாஅ விடின் வையத்தார்க்கு எல்லாம் வசை என்ப.