பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

அ-2-20 புகழ் -24


258 அ-2-20 புகழ் 24

- இவ்விடத்து, மணக்குடவர் தரும் ஒருசிறு விளக்கம் கவனிக்கத்தக்கது. அது, மேல் முன்குறளில் புகழில்லாதாரை இகழ்ப என்றார்; அவர் குற்றமில்லாராயின் இகழப்படுவரோ என்றார்க்கு, வேறு குற்றம் வேண்டா புகழின்மை தானே அமையும் என்பார், என்பது.

4) முன் பாடலில் கூறியவாறு, புகழில்லாதார் இகழப்படுவார் என்ற விளக்கம் இதில் மேலும் விளக்கப் பெறுவதால் அதன்பின் இது வைக்கப் பெற்றது, என்க.

உங்க வசையிலா வண்பயன் குன்றும்; இசையிலா

யாக்கை பொறுத்த நிலம். - 239

பொருள்கோள் முறை

இசையிலா யாக்கை பொறுத்த நிலம் வசையிலா வண்பயன் குன்றும்.

பொழிப்புரை புகழ் விளைவிக்காத வெற்றுடம்பைச் சுமந்து நிற்கும் நிலமும், தாழ்வில்லாமல் வளமான பயனைத் தந்துகொண்டிருந்த நிலையில் குன்றி வெறுநிலமாய்ப் போய்விடும். -

சில விளக்கக் குறிப்புகள்:

1 இசைஇலா யாக்கை பொறுத்த நிலம் : புகழ் விளைவிக்காத வெற்றுடம்பைச்

சுமந்து நிற்கும் நிலமும். இசைஇலா யாக்கை புகழை விளைவிப்பதற்கு உரியதாகி மக்களது உடலைப் பெற்றிருப்பினும், அதை விளைவிக்காததால் வெறும் உடம்பாகப் போயினதைச் சுட்ட, யாக்கை என்றார். பொறுத்த நிலம்: அத்தகவில்லாத வெறும் உடம்பைச் சுமந்து

கொண்டிருக்கும் நிலம். 2 வசையிலா வண்பயன் குன்றும் : தாழ்வில்லாமல் வளமான பயனைத் தந்து கொண்டிருந்த நிலைகுன்றி - குறைந்து வெறுநிலமாய்ப் போய்விடும். - வசையிலா வண்பயன் - தாழ்வில்லாதபடி வளமான பயனைத் தந்து

கொண்டிருந்த நிலையில். - - - . - குன்றும் : குறைவுபட்டுப்போய் வெறுநிலமாய்ப் போய்விடும்.

இசையாகிய உடலுக்குரிய விளைவு குறையவே, அது வெற்றுடலாயிற்று.