பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/261

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

259


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 259

எனவே, . அந்த வெறும் உடலைச் சுமந்த நிலமும், முன்னர் நல்ல வளமுடையதாக இருப்பினும், விளைவு குறைந்து வெறுநிலமாகப் போய்விடும், என்றார். - வெறுநிலமாகப் போய்விடுதல் வளத்தில் குன்றுதல்,

வளமான விளைவைப் பெற்றவர்கள், தாமே உண்டு உண்டு விளைவைத் தீர்த்து, மேலும் விளைவு முயற்சியின்றி வாழ்க்கைக் களிப்பையே பெரிதாகக் கருதி விளைவெலாம் துய்த்து வந்ததால், மேலும் விளைவின்றி வெறுநிலமாய்ப் போனது என்றார், என்க.

‘இசைபட வாழ்பவர் செல்வம் போலக் காண்தொறும் பொலியும்’ - நற்: 217:1-2 - புகழை உடலுக்கு விளைவாக்கியவர், புகழற்ற வெற்றுடலைச் சுமந்த

நிலமும் வெறுநிலம் என்றார். - இதனால், புகழுக்குரிய வகையில் முயற்சியும், செயலும் இன்றிப் போவது, விளைவுக்குரிய நிலமும் விளைவில்லாமற் போவதுபோல் என்று விளக்கினார், என்க.

- ஒரு நிலம் விளைந்தால்தான் அது புகழ்பெறும் அதுபோல் ஓர் உடல் முயற்சியும் செயலும் கொண்டு உழைத்தால்தான் அது புகழ்பெறும், என்றார்.

- புகழ் விளைவது, பயிர் விளைவு போன்றது என்பதும், புகழற்ற உடல்,

விளைவற்ற நிலம் என்பதும் ஈண்டு உற்று நோக்கி மகிழத்தக்கன. 3) புகழில்லா யாக்கை, விளைவில்லா நிலம்போல், என்று கூறி, முன்னையதில் கூறிய வசையென்ப வையத்தார்க்கு’ என்று உலகத்தொடு பொருந்தியதை இதில் இயைபு படுத்தியதால், அதன்பின் இது வைக்கப் பெற்றது.

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் - நிலமென்னும் நல்லாள் நகும்’ - 1040 நாடா கொன்றோ காடா கொன்றோ - அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே’ .... : - புறம்:187

- என்றார், பிறரும். . . . . . . . . ; -