உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

27


சில விளக்கக் குறிப்புகள் :

1. கண்நின்று கண்ணறச் சொல்லினும் - ஒருவன் கண்ணுக்கு எதிரே நின்று, கண்ணோட்டம் எனும் இரக்கம் இன்றி, அவன் குற்றத்தைக் கடிந்து சொல்லினும்.

கண் அற - கண்ணோட்டம் (இரக்கம்) இல்லாதபடி

- கண் - இவ்விடத்துக் கண்ணோட்டம்.

கண்ணோட்டம் - இரக்கம்.

‘கண்என்னும் கண்ணோட்டம் இல்லாத கண்’ - 573
‘கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்’ - 575

- கண் - கண்ணோட்டம்.

‘கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்' - 566

- கண்ணோட்டமின்றிச் சொல்லுதலால் கடிந்து சொல்லுதல் ஆயிற்று.

2. முன்இன்று, பின்நோக்காச்சொல் சொல்லற்க - அவன் முன் இல்லாமல், பின் விளையும் கேடுகளை எண்ணிப்பாராமல், அவனைப் பற்றிப் புறங்கூறும் பழிச் சொற்களைப் பிறரிடம் சொல்லுதல் வேண்டா.

- முன்நின்று - அவன்முன் இல்லாமல்

- புறத்தேபோய்,

- பின்நோக்கா - பின்விளையும் கேடுகளை எண்ணிப் பாராமல்.

சொல் - அவ்வாறான புறங்கூறுதலாகிய பழிச் சொற்கள்.

சொல்லற்க - சொல்லுதல் வேண்டா.

பின்விளைவு கருதுதல், - அதனால் அவனுக்கும், புறங்கூறப் பெற்றவனுக்கும் வருகின்ற பொதுநலக் கேடுகள்.

- அறக் கேடுகள், என்க.

கணமலை நன்னாட கண்ணின்று ஒருவர்
குணமேயும் கூறற் கரிதால் - குணன்அழுங்கக்
குற்றம் உழைநின்று கூறும் சிறியவர்கட்
கெற்றால் இயன்றதோ நா. -நாலடி:353

- என்றார் பிறரும்.